For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் அறிவியல் கண்காட்சி இன்று துவக்கம்

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் விஐடி பல்கலைக் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 2 நாள் அறிவியல் கண்காட்சி இன்று தொடங்குகின்றது.

இது குறித்து விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி.விசுவநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பள்ளி மாணவர்கள் இடையே அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் கண்காட்சி இன்றும்(21.1.2012), நாளையும்(22.1.2012) விஐடி பல்கலைக் கழகத்தில் நடைபெற உள்ளது.

இதில் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 1200 மாணவ - மாணவிகள் பங்கேற்க உள்ளனர். அறிவியல் கண்டுபிடிப்பு மாதிரி, புதிய ஆலோசனை வழங்குதல், பதாகை மூலம் விளக்குதல், வினாடி -வினா, தேவையற்ற பொருள் மூலம் அறிவியல் மாதிரி செய்தல் உள்ளிட்ட 5 வகையான போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும் என்றார்.

English summary
VIT university has organised a science exhibition in for 2 days. Exhibition starts from today. More than 1,200 students from TN and Puducherry will participate in the exhibition, VIT university chancellor said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X