For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் பதவிக்கு ஆறு பேரு, அதில் ஒருத்தர் மோடி-கக்தாரி

Google Oneindia Tamil News

Nitin Gadkari
டெல்லி: பிரதமர் பதவிக்கு பாஜகவில் 5 முதல் 6 பேர் வரை உள்ளனர். அதில் ஒருவர்தான் நரேந்திர மோடி என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் நிதின் கத்காரி.

பாஜகவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று முன்பு அத்வானியைக் கூறி வந்தனர். ஆனால் தற்போது அத்வானியை ஓரம் கட்டி விட்டார் நரேந்திர மோடி. இப்போது பலரும் மோடிக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் அத்வானி தரப்பு அதிருப்தியில் உள்ளது. மோடிக்கு ஆதரவு, அத்வானிக்கு ஆதரவு என்று கட்சியில் இருவேறு கருத்துக்கள் நிலவுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

பாஜக தலைவர் கத்காரியே ஒரு நாள் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். இன்னொரு நாள் அத்வானியை ஆதரித்துப் பேசுகிறார். இந்த நிலையில் மொத்தம் 6 பிரதமர் வேட்பாளர்களை தங்களது கட்சி கொண்டிருப்பதாக புதுப் பேச்சு பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாஜகவைப் பொறுத்தவரை 5 முதல் 6 பிரதமர் வேட்பாளர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் நரேந்திர மோடி. மற்றபடி இதுகுறித்து இப்போதைக்கு எங்களிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் கத்காரி.

சரி, உ.பி. தேர்தல் பிரசாரத்திற்கு ஏன் மோடி வரவில்லை என்று கேட்ட கேள்விக்கு அவர் மிகவும் பிசியாக இருப்பதால் பிரசாரத்திற்கு வர முடியவில்லை என்றார் கத்காரி.

உ.பி மாநில தேர்தல் பிரசாரப் பொறுப்பாளராக மோடிக்கு வேண்டப்படாதவரான சஞ்சய் ஜோஷி இருப்பதால் மோடி கோபமடைந்துள்ளாரா என்ற கேள்விக்கு அவர் கோபத்தில் இருக்கிறாரா, ஏமாற்றத்தில் இருக்கிறாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது என்றார் கத்காரி.

English summary
Why has one of the BJP's most high-profile politicians, described by the leadership as one of the potential Prime Ministerial candidates, been missing from the campaign trail in Uttar Pradesh? Party President Nitin Gadkari says Modi is too busy to join the BJP on the election campaign. However, BJP President Gadkari said that he would not comment on whether Modi was angry or disappointed and that he remained one among the the party's five to six Prime Ministerial candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X