மாவோயிஸ்டுகள் செல்வாக்குடன் உள்ள மாவட்டங்களுக்கு செல்கிறார் ஜெய்ராம் ரமேஷ்
Subscribe to Oneindia Tamil

ஒடிசாவின் ராயகடா, மல்காங்கிரி மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளாகும். மல்காங்கிரி மாவட்ட ஆட்சியராக இருந்த வினீல்குமாரை ஏற்கெனவே மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ராயகடா மாவட்டத்திலும் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு ஓங்கியே இருக்கிறது.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம் ஒடிசாவின் எல்லையோரத்தில்தான் இருக்கிறது. சுக்மா ஆட்சியராக இருந்த அலெக்ஸ்பால் மேனனை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று விடுவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த மூன்று மாவட்டங்களில் மேம்பாட்டுப் பணிகளை ஆராயவும் ஆலோசனை நடத்தவும் மே 27, 28 ஆகிய நாட்களில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இப்பகுதிகளில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஆட்சியர்களே அச்சப்படுகிற அடர்வனப்பகுதி மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளுடன் மல்லுகட்டப் போகிறாரோ மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.?












Click it and Unblock the Notifications