For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய சந்தையில் கம்ப்யூட்டர் விற்பனையில் 6.6 சதவீதம் வளர்ச்சி

Google Oneindia Tamil News

Computer
டெல்லி: 2012ம் ஆண்டின் முதல் காலிறுதியி்ல் இந்திய சந்தையில் கம்ப்யூட்டர்கள் விற்பனையில் 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதில் லினோவா நிறுவனம் அதிகபட்சமாக 64 சதவீதம் கம்ப்யூட்டர் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

இந்திய கம்ப்யூட்டர் சந்தையில் விற்பனை அளவு குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் வெளியான தகவலில் கூறியிருப்பதாவது

2012ம் ஆண்டின் முதல் காலிறுதியில் இந்தியாவில் 2.8 மில்லியன் சாதாரண கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்-டாப்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் காலிறுதியின் அளவை விட சுமார் 6.6 சதவீதம் அதிகமாகும்.

கம்ப்யூட்டர்கள் மீதான வரிகள் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து கம்ப்யூட்டர்களின் விலையும் உயர்ந்தது. இதனால் கடந்த சில மாதங்களாக கம்ப்யூட்டர்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கம்ப்யூட்டர் விற்பனையில் 6.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலிறுதியை விட இந்த ஆண்டின் முதல் காலிறுதியில் சாதாரண கம்ப்யூட்டர்களின் விற்பனை 20 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால் லேப்டாப் விற்பனையில் கடந்த ஆண்டின் காலிறுதியை விட இந்த ஆண்டு காலிறுதியில் 27 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

கம்ப்யூட்டர்கள் விற்பனையில் முன்னோடியாக திகழ்ந்த டெல் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலிறுதியில் கம்ப்யூட்டர்கள் விற்பனையில் 11 சதவீதம் சரிவை கண்டுள்ளது. அதேபோல ஹெச்சிஎல் நிறுவனத்தின் விற்பனையும் 5.8 சதவீதம் குறைந்துள்ளது.

ஆனால் லினோவா நிறுவனம் கம்ப்யூட்டர் விற்பனையில் 64 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. அதேபோல ஹெச்பி நிறுவனத்தின் கம்ப்யூட்டர் விற்பனையும் 21 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A report issued by Gartner says that the Indian PC market, which comprises of both desk-based and mobile PC, totaled about 2.8 million units in the first quarter of 2012, almost 6.6 per cent increase over the same period last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X