For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுவாணி ஆற்ற்ல் அணை கட்டினால் உச்சநீதிமன்றத்துக்கு போவோம்: கேரளத்துக்கு தமிழக அரசு எச்சரிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

TN Govt
ஈரோடு: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டினால் தமிழகம் அதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது, உச்சநீதிமன்றத்தை அணுகும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் கேவி.ராமலிங்கம் தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கே.வி. ராமலிங்கம் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு மற்றும் சிறுவாணி விவகாரத்தில் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். காவிரி நதிநீர் தீர்ப்பாணையத்தின் இறுதி உத்தரவை மீறி சிறுவாணி ஆற்றில் எந்த நீர்ப்பாசன திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று கேரளாவுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார்.

அதையும் மீறி கேரள அரசு அணை கட்ட முயற்சித்தால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்றார் அவர்.

English summary
Tamil Nadu would approach the Supreme Court and will not be a 'silent spectator' if Kerala government went ahead with its plan to build a dam across the Siruvani river, public works minister KV Ramalingam has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X