For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இங்கிலாந்தில் கே.எஃப்.சி. சிக்கன் வாங்காதததால் வயதான தந்தையின் இடுப்பை ஒடித்த குடிகார மகன்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் கே.எப்.சி. சிக்கனுக்கு பதில் வேறு சிக்கன் வாங்கி வந்த வயதான தந்தையை மகன் அடிக்க வந்தபோது அவர் கீழே விழுந்ததில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது.

இங்கிலாந்து கவுன்ட்டி டர்ஹமில் உள்ள ஹார்ட்பூலைச் சேர்ந்தவர் டேவிட்(46). அவரது தந்தை நார்மன் பெல்(76). அவர் தனது மகனுக்காக சூப்பர் மார்க்கெட் சென்று பொறித்த கோழிக்கறி வாங்கிச் சென்றார். பெல் தனது மனைவியுடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த பக்கமாக வந்த டேவிட்டிடம் அவரது தாய் பெல் கோழிக்கறி வாங்கியிருப்பதை தெரிவித்தார்.

அதற்கு குடிகாரரான டேவிட் கே.எப்.சி. சிக்கன் வாங்காமல் ஏதோ சிக்கனை எப்படி வாங்கி வரப்போகுது என்று கூறி தந்தையை தனது தலையால் முட்ட வந்தார். அதில் இருந்து தப்பிக்க முயன்ற பெல் கீழே விழுந்தார். இதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 11 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.

இதற்கிடையே டேவிட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் தனது மகனை மன்னித்து விடுதலை செய்யுமாறு பெல் கேட்டுக் கொண்டதன்பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

English summary
In England, a drunkard named David left his elderly father with a broken hip after flying into a rage when his father brought some other chicken other than KFC chicken.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X