For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 61 இலங்கை அகதிகள் மீட்பு- தரகர்கள் 4 பேர் கைது

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை; தமிழ்நாட்டின் பல்வேறு அகதிகள் முகாம்களில் இருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக 61 ஈழத் தமிழர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அருகே வண்டலூரில் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நடத்திய சோதனையின் 61 ஈழத் தமிழர்கள் பயணித்த 3 வேன்கல் தடுத்து நிறுத்தபப்ட்டன. அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகள் மூலம் வண்டலூரில் இருந்து கன்னியாகுமரி அல்லது வேளாங்கண்ணி சென்று அங்கிருந்து படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோர பயணம் செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் அனைவரையும் அவரவர் முகாம்களுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஈழத் தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைப்பததற்காக தரகர்களாக செயல்பட்ட நகுலாம்பிகை, சின்னதம்பி, சசிகுமா மற்றும் வின்சென்ட் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். காளிதாஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அனைவரும் ஈழத் தமிழ் அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Nadu 'Q' branch sleuths on Thursday night rescued 61 Sri Lankan Tamils at Vandalur while being taken by a gang involved in human trafficking to Mamallapuram from where they were to be transported to an island near Australia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X