ஊழல்கள் மலிந்த நாடு இந்தியா! உலக அளவில் 94வது ரேங்க்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக அளவில் ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 94 வது ரேங்க் கிடைத்துள்ளது. உலக அளவில் அரசுத்துறை, பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஊழல்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஊழல்கள் நிறைந்த நாடுகள் எவை என்பது குறித்து, டி.ஐ.ஐ. எனப்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் இந்தியா என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையினை வெளியிட்டது.

Corruption
இந்தியாவிற்கு 94 வது ரேங்க்

கடந்த 2011-ம் ஆண்டு 182 நாடுகளில் ஆய்வு செய்ததில் ஊழல்கள் குறைந்த உள்ள நாடுகளில், நியூசிலாந்தும், பின்லாந்தும் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை இந்தியா 95-வது ரேங்க் பெற்றிருந்தது. இந்தாண்டு 176 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்தியா 94 ரேங்க் பெற்று 36வது இடத்திலும், தொடர்ந்து சீனா 39வது இடத்திலும், பாகிஸ்தான் 27வது இடத்திலும் உள்ளன.

வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஊழல்

உலக அளவில் ஊழல்கள் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முதல் 10 நாடுகள் பட்டியலில் இப்போதும் ஆப்ரிக்க நாடான சோமாலியா, வடகொரியா, ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று டி.ஐ.ஐ. அமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.அகர்வால் தெரிவித்துள்ளார்

பொதுவாக வளர்ச்சி அடைந்த நாடுகளான வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஊழல் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகளான ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஊழல் அதிகரித்துள்ளது.

எங்கும் எதிலும் ஊழல்

அதன்படி 2012-ம் ஆண்டு வரை மொத்தம் உள்ள 182 நாடுகளில் இந்தியா 36 இடத்தில் உள்ளது. இது உலக அளவில் 94வது ரேங்க் ஆகும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக 2-ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஊழல், நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் ஊழல், காமல்வெல்த் போட்டிகளில் ஊழல் போன்ற பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தற்போது இந்தியாவில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகின்றன.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல்

டி.ஐ.ஐ அமைப்பு 2003 ஆம் ஆண்டிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஊழல்கள் மலிந்த நாடுகளைக் கண்டறிந்து ரேங்க் கொடுத்து அதை வெளியிட்டு வருகிறது.

இதில் ஊழல் மலிவுச் சுட்டெண் என்பது உலக நாடுகளின் ஊழல் நிலையின் மதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India has been ranked 94th out of 176 countries in Transparency International's 2012 Corruption Perception Index (CPI). Last year, India was ranked 95 out of 183 countries that were studied.In this year's CPI, India earned a very low score of 36 on a scale from 0 (most corrupt) to 100 (least corrupt).
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற