73% வருமான வரியைக் கட்டுவது மகாராஷ்டிரம், டெல்லி, கர்நாடகம், தமிழகம், ஆந்திரா தான்!

அதே போல நாட்டில் 3,80,000 லட்சம் நிறுவனங்கள் வருமான வரியை செலுத்துகின்றன. வருமான வரி செலுத்துவதில் மகாராஷ்டிரம், டெல்லி, கர்நாடகம் ஆகியவை தான் முன்னணியில் உள்ளன. இதற்கு மும்பை, நொய்டா, பெங்களூரில் அதிக அளவில் தொழில், சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளதே காரணம். 4வது இடத்தில் தமிழகமும், 5வது இடத்தில் ஆந்திராவும் உள்ளன. இதற்கும் இந்த மாநிலங்களில் அதிகமான சாப்ட்வேர் என்ஜியர்கள் இருப்பதே காரணம்.
நாட்டில் 120 கோடி மக்கள் உள்ள நிலையில் வருமான வரி செலுத்துவோர் 3.3 கோடி பேர் மட்டுமே. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.7 சதவீதம் மட்டுமே ஆகும். அதிலும் மகாராஷ்டிரம், டெல்லி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து தான் ஒட்டு மொத்த நேரடி வருமான வரியில் 61 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.
மிக மிகக் குறைவான வருமான வரி வசூலாவது லட்சத்தீவுகள் (ரூ. 1.77 கோடி), மிசோரம் (ரூ. 6.89 கோடி), நாகாலாந்து (ரூ. 19.29 கோடி) ஆகிய மாநிலங்களில் தான்.
மகாராஷ்டிராவில் 2010-11ம் ஆண்டில் ரூ. 1.75 லட்சம் கோடியும், டெல்லியில் ரூ. 64,000 கோடியும், கர்நாடகத்தில் ரூ. 35,825 கோடியும், தமிழகத்தில் ரூ. 28,409 கோடியும், ஆந்திராவில் ரூ. 23,133 கோடியும் வருமான வரி வசூலாகியுள்ளது.
இதன்மூலம் மொத்த நேரடி வருமான வரியில் மகாராஷ்டிரத்தின் பங்கு 40 சதவீதமாகும். டெல்லியின் பங்கு 14%, கர்நாடகத்தின் பங்கு 8%, தமிழகத்தின் பங்கு 6%, ஆந்திராவின் பங்கு 5%. ஆக, இந்த 5 மாநிலங்களில் இருந்து 73 சதவீத வருமான வரி வசூலாகிறது.
நாட்டின் மற்ற எல்லா பகுதிகளும் இணைந்து நாட்டுக்குக் கட்டும் நேரடி வருமான வரி மிச்சமுள்ள 26 சதவீதம் (ரூ. 1.13 லட்சம் கோடி) மட்டுமே.
மொத்தத்தில் 2010-11ம் நிதியாண்டில் நிறுவனங்கள் செலுத்தும் கார்ப்பரேட் வரி மூலம் நாட்டுக்கு ரூ. 3,55,267 கோடியும் வருமான வரி மூலம் ரூ. 1,58,631 கோடியும் (மக்கள் தொகையில் 2.7 சதவீதம் பேர் மட்டுமே கட்டிய வரி), பிற வரிகள் மூலம் ரூ. 8,205 கோடியும் மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications