For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்காசி தேமுதிக கவுன்சிலர் மீது வழக்குஅரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த தேமுதிக கவுன்சிலர் மீத

Google Oneindia Tamil News

தென்காசி: தென்காசியில் தேசிய அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்கும் பணியை நிறுத்தி இடையூறு செய்த தேமுதிக கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தென்காசி நகராட்சி பகுதியில் தேசிய அடையாள அட்டை (ஆதார்) வழங்குவதற்காக போட்டோ எடுக்கும் பணி வார்டுகள் வாரியாக நடந்து வருகிறது. 6வது வார்டில் போட்டோ எடுக்கும் பணி நடந்தது. அப்போது அதில் சில குறைபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு சென்ற அதே வார்டு தேமுதிக கவுன்சிலர் வெங்கட்ராமன் எப்படி தேசிய அடையாள அட்டையில் தவறுதலாக பதிவுகள் செய்யலாம் என கூறி ரகளை செய்துள்ளார்.

மேலும் அங்கு இருந்த ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதனால் போட்டோ எடுக்கும் பணி பாதிக்கப்பட்டு அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தென்காசி போலீசில் வி.ஏ.ஓ. வசந்தகுமார் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப் பதிவு செய்து கவுன்சிலர் வெங்கட்ராமனை தேடி வருகிறார்.

English summary
DMDK councillior Venkatraman was booked for disturbing government employees while they were taking photos of the people for the Aadhar card.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X