For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலச்சந்திரன் பற்றிய புகைப் படங்கள்- கோத்தபாய ராஜபக்சே நிராகரிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Gotabaya rubbishes Channel 4 photos
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் போலியானவை என்று இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.

பாலச்சந்திரன் கைதும் அதன் பின்னரான படுகொலை படமும் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்சே, இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள "நோ பயர் சோன்" புகைப்படங்கள் நம்பக் கூடியவை அல்ல.

பாலச்சந்திரன் பற்றிய புகைப்படங்களில் இராணுவ அடையாளங்களே இல்லை. ஆனால் அனைவரும் இராணுவத்தின் பதுங்கு குழியில் இருக்கிறார் எனக் கூறுகின்றனர். புகைப்படங்களை வெட்டி ஒட்டும் வேலையை இவர்கள் பல காலங்களாகவே செய்துகொண்டிருக்கின்றனர்.

இறுதி யுத்த காலத்தில் எடுத்ததாகக் கூறப்படும் இந்த படங்களை எடுத்தவர் யார்? இதுபற்றி பேசுவோர் சிறார் போராளிகளைப் பற்றி பேசுவதில்லையே என்றார்.

English summary
Sri Lanka Defence Secretary Gotabaya Rajapaksa yesterday rejecting the ... looking at the pictures which do not indicate anything related to the military.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X