For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சி ஒழிஞ்சது ஏன்னு உங்களுக்கு தெரியுமா? இதை படிங்க..

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஏன் ஒழிஞ்சு போச்சுன்னு நினைக்கிறீங்க? திராவிடக் கட்சிகள் செல்வாக்கு செலுத்தினதால என்றால் சத்தியமாக இல்லைங்க பாஸ்.. இதைப் படிச்சுப் பாருங்க...

கூகுளில் காங்கிரஸ்

கூகுளில் காங்கிரஸ்

தமிழக காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை படிக்க வேண்டும் என்ற ஆவல் வரவே இருக்கவே இருக்கிறதே கூகுளில் Tamilnadu Congress என டைப் செய்து கீ போர்டில் enter ஐ ஒரு தட்டி தட்டிவிட்டேன்.. வழக்கம் போலவே நிறைய லிஸ்ட் வந்தது. எடுத்த உடனே "www.aicc.org.in/tamilnadupcc" லிங்க் வந்தது...அட பரவாயில்லை.. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமாச்சே... நிறைய தகவல்கள் இருக்கும்னு உள்ளே போனே பாஸ்

காங். தலைவர் தங்கபாலு?

காங். தலைவர் தங்கபாலு?

அப்படியே ஒரு நிமிஷம் ஷாக்காயி ஜெர்க் ஆகிட்டேன்... தமிழ்நாடு பிரதேஸ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வி. தங்கபாலு எம்.பி. என்று போட்டு அவரது படமும் போட்டிருந்தார்கள்.. இருந்தாலும் சின்னதாக ஒரு சந்தேகம்.. மூத்த பத்திரிகையாளர் ஒருவருக்கு போனடிச்சு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கேள்விப்பட்டிருக்கேன்..அதுக்கு தலைவர் ஞானதேசிகன்தானே உறுதிப்படுத்திகிட்டு அதென்ன தமிழ்நாடு பிரதேஸ் காங்கிரஸ் கமிட்டி, அப்படி ஒன்னு வேற இருந்துச்சுன்னா அதுக்கு தங்கபாலுதான் தலைவரான்னு கேட்டேன்... அவரோ, நாடுங்கிறது பிரதேஸத்தைத்தான் குறிக்கும் ஞானதேசிகன்தான் தலைவர் என்றார்.

ஆமா ஞானதேசிகன் தலைவராக நியமிக்கப்பட்டு எத்தனை வருஷமாச்சுன்னு கேட்டேன்... ஒரு வருஷமாச்சே என்றார்...

சுதர்சனம் இறந்து 3 வருஷமாச்சு...

சுதர்சனம் இறந்து 3 வருஷமாச்சு...

சரின்னு சொல்லிட்டு இன்னொரு தகவலை உறுதிப்படுத்தனும்னு கேட்டேன்.. "காங்கிரஸ் கட்சியின் சட்டசபை தலைவர் டி. சுதர்சனம்னா? ன்னு கேட்டேன்..உங்களுக்கு வர்ற கோபம்தான் அந்த பத்திரிகையாளருக்கு செம கோபம்...ஏங்க ஒரு மனுஷன் செத்துப் போய் 3 வருஷத்துக்குப் பின்னாடி இப்படி ஒரு சந்தேகமான்னு கேட்டார்..ஆமாங்க அவர் கோயம்புத்தூரில் செம்மொழி மாநாடு நடந்துகிட்டு இருந்தப்போ இறந்துட்டார்..எனக்குத் தெரியுதுங்க.. ஆனால் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ லிங்கில் www.aicc.org.in/tamilnadupcc அப்படி இல்லையேன்னு சொன்னேன்... அதோட அவரோட உரையாடல் முடிஞ்சதா..

ஞானதேசிகன், கோபிநாத்

ஞானதேசிகன், கோபிநாத்

இருந்தாலும் நம்ம லிங்க்தான் தப்பா இருக்குமோன்னு மறுபடியும் www.aicc.org.in-ல் தேடிப் பார்த்தேன்.. அதில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டதெல்லாம் பக்காவா அப்டேட் ஆகி இருக்கேன்னு நினைச்சுகிட்டே Congress in States என்ற லிங்கை கிளிக் பண்ணி பார்த்தா அதுல ஞானதேசிகன் தலைவர் என்றும் கோபிநாத் சட்டசபை தலைவர் என்றும் சரியாகப் போட்டிருக்கிறார். இதோ அந்த இமேஜ்.....

ஒருவேளை நாம் பார்த்த லிங்க் தப்போ என நினைச்சுகிட்டே இந்த அப்டேட் செய்யப்பட்ட இடத்திலேயே கொடுக்கப்பட்டிருந்த http://www.aicc.org.in/tamilnadupcc லிங்க்கை கிளிக் பண்ணினேனா..அட அதே தாங்க திரும்பவும்..www.aicc.org.in/tamilnadupcc

தங்கபாலுதான் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்..3 வருஷத்துக்கு முன்னாடி செத்துப் போன சுதர்சனம் தான் சட்டசபை தலைவர்னு இருக்கு...

அப்பத்தான் மனசுல பட்டுச்சு..தமிழ்நாட்டுல இப்படி இருந்ததாலதான் காங்கிரஸ் ஒழிஞ்சதோன்னு...

சுதர்சனம் மறைவு தொடர்பாக தட்ஸ்தமிழ் வெளியிட்ட செய்தி:சுதர்சனம் மறைவு தொடர்பாக தட்ஸ்தமிழ் வெளியிட்ட செய்தி:

English summary
The Congress party's official website say now Tamilnadu Congress president KV Thangabalu and Congress legislative leader 'late' Sudharanam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X