For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை: இன்று பவுனுக்கு ரூ. 192 குறைவு

By Siva
Google Oneindia Tamil News

Gold continues to loose its sheen
சென்னை: தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.192 குறைந்து இன்று காலை ஒரு பவுன் ரூ.19,208க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து இனி தங்கத்தை நகைக்கடைகளில் மட்டுமே பார்க்க முடியும் போன்று நம்மால் வாங்க முடியாது என்று ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நினைத்தனர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ. 24,480 ஆக அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி முதல் விஷமாய் ஏறிய தங்கத்தின் விலை குறைந்து கொண்டே போகிறது.

கடந்த 11ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2,760 ஆகவும், பவுன் ரூ.22,080 ஆகவும் இருந்தது. தங்கத்தின் விலை குறைந்துவிட்டதே என்று நினைத்த மக்கள் மறுநாள் அதாவது 12ம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.352ம், 13ம் தேதி ரூ. 672ம், 15ம் தேதி ரூ.984ம், 16ம் தேதி ரூ. 544ம் குறைந்தது அவர்களை திக்குமுக்காட வைத்துவிட்டது.

இந்நிலையில் இன்று காலை தங்கத்தின் விலை மேலும் குறைந்தது. இன்று காலை கிராமுக்கு ரூ.24 குறைந்தது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.19,400-இல் இருந்து குறைந்து ரூ.19,208க்கு விற்பனையாகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,872 குறைந்து மக்கள் மனதில் பாலை வார்த்துள்ளது.

English summary
Gold prices have continued to decrease. A gram costs Rs. 24 less while a sovereign costs Rs. 192 less.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X