For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஹிந்து" என்றால் திருடன் என்று பேசிய கருணாநிதி 4 நாட்களுக்குள் விளக்கம் தர கோர்ட் உத்தரவு

By Mathi
Google Oneindia Tamil News

HC notice to karunanidhi on remark 'Hindu' meant 'thief
சென்னை: "ஹிந்து" என்றால் திருடன் என்று பொருள் இருக்கிறது எனப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி 4 நாட்களுக்குள் விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் வேத அறிவியல் மையத்தின் சார்பில் பி.ஆர்.கௌதமன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், கடந்த 24.10.2002 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஹிந்து என்றால் திருடன் என்று கருணாநிதி பேசியிருந்தார். இது ஹிந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் படி இருக்கிறது.இதற்கு தகுந்த நடவடிக்கை கோரி மறுநாள் 25.10.2002 அன்று மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மேலும், இது குறித்து மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, உயர் நீதிமன்ற உத்தரவின் படி 6.1.2006இல் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரின் அடிப்படையில் அவரை அழைத்து விசாரிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ காவல் துறையினர் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.எனவே உயர்நீதிமன்ற உத்தரவின்படி பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரின் படி கருணாநிதியிடம் விளக்கம் கேட்கவும், அவர் மீதான விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தனது மறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது இன்று காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதி, கருணாநிதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கலாம் என்றும் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான அடுத்த விசாரணையை வரும் செவ்வாய்க் கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால், வரும் 4 நாட்களுக்குள் கருணாநிதி உரிய விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

English summary
The Madras High court today send a notice to DMK leader Karunanidhi for his controversial remark that the term 'Hindu' meant 'thief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X