For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அகதியாக அடைக்கலம் கோரிய அசாஞ்சே! நிராகரித்தது இந்திய அரசு!

By Mathi
Google Oneindia Tamil News

India reject Julian Assange's asylum plea?
லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தமக்கு அகதியாக அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கோரியதாகவும் ஆனால் தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மே 24-ந் தேதியன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் தாம் அகதியாக அடைக்கலம் கோரி கடிதம் கொடுத்ததாக அசாஞ்சே கூறியுள்ளார். அத்துடன் இந்திய தூதரக அதிகாரி தமது கடிதத்தைப் பெற்றுக் கொண்டதற்கான சான்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார். மேலும் தமது கடிதம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை நிராகரித்திருக்கும் மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன், அசாஞ்சே அகதியாக அடைக்கலம் கோரி பிரதமருக்கு என எந்த ஒரு கடிதமும் அனுப்பப்படவில்லை. அப்படியான எந்த ஒரு ஆவணமும் இல்லை என்றார்.

இதில் அதிருப்தி அடைந்திருக்கும் அசாஞ்சே, மனித உரிமைகள் பற்றி பேசுகிற இந்தியாவின் நிலைப்பாடு சரி அல்ல என்றார்.

English summary
The ministry of external affairs in New Delhi saying it had no record of Assange's seeking refuge appeal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X