For Daily Alerts
Just In
கொலை முயற்சி வழக்கில் கைது செய்துவிடுவார்களோ?: முன்ஜாமீன் கோரிய விஜயகாந்த்

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதை அடுத்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 1ம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக வழக்கறிஞர்களுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அரசு வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் விஜயகாந்த் உள்பட 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் எந்நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.