For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறுவை சாகுபடிக்கு வைகை அணை தண்ணீர் திறப்பு! ஓ.பி.எஸ், செல்லூர் ராஜு பங்கேற்பு

Google Oneindia Tamil News

தேனி: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கான நீர்ஆதாரமாக வைகை அணை திகழ்ந்து வருகின்றது.

வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது.

Water released from Vaigai dam

பெரியாறு - வைகை அணை இருபோக சாகுபடி நிலங்களில் முதற்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு விவசாயகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு முதல்வர் ஜெயலிலதா உத்தரவிட்டார்.

இதன்படி, வைகை அணையில் இருந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. நிதிஅமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர்.

vaigai dam

இதன் மூலம் மதுரை மாவட்டம் வடக்கு வட்டத்தைச் சேர்ந்த 29501 ஏக்கர் நிலமும், வாடிப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த 13747 ஏக்கர் நிலமும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 1793 ஏக்கர் நிலமும் ஆக மொத்தம் 45041 பதிவு பெற்ற பெரியாறு இருபோக சாகுபடி நிலங்கள் பயன்பெறும் என கூறப்படுகின்றது.

மேலும், இன்றுமுதல் விவசாய பாசனத்திற்காக வினாடிக்கு 900 கனஅடி நீர் வீதம் 120 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தென் மாவட்ட விவசாயிகள் ஆறுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
After much expectation and protests by the farming community in the district, water for irrigation of kuruvai crop was finally released from the Vaigai dam, on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X