For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் கொட்டித் தீர்த்த மழை... நிரம்பியது தென்மலை நீர்த்தேக்கம்

Google Oneindia Tamil News

தென்மலை: கேரளாவில் பெய்து வரும் கன மழையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென்மலை நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளது.

தமிழக -கேரளா எல்லை ஆரியங்காவு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கல்லடா ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீணாய் கடலில் கலக்கிறது.

இதையடுத்து கேரளா அரசு இம் மாநிலத்தில் புகழ் பெற்ற எக்கோ டூரிசம் சென்டர் அமைந்துள்ள தென்மலையில் இயற்கை எழல் கொஞ்சும் வனப்பகுதியில் 1962ம் ஆண்டு 13 கோடி ரூபாய் செலவில் கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழை, பத்தினம்திட்டா ஆகிய 4 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு தேவையான குடிநீர்,விவசாயத்திருக்கு பயன்படும் தண்ணீரை கருத்தில் கொண்டு 24 கிமீ தூரம், 2 கிமீ அகலத்தில் 115 மீட்டர் உயரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைகளை மையமாக வைத்து கல்லடா ஆற்றின் குறுக்கே தென்மலை நீர்தேக்கம் அமைத்தது.

நெடும் தி்ட்டமான இப்பணிகள் 1967ம் ஆண்டு நிறைவு பெற்றது. மொத்த திட்டமதிப்பீடு தொகை ரூபாய் 700 கோடி ஆகும். இந்த நீர்தேக்கம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் தொடக்கத்தில் உள்ளது.

மேற்கு நோக்கி பாயும் ஆறுகளின் முதல்ஆறு கல்லடா தான். இந்த கல்லடா ஆறுதான் தென்மலை நீர்தேக்கத்தை நிரப்பி 4 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு பொய்த்து போன தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையின் காரணமாக அணை நிரம்பவில்லை.

தற்போது வலுப்பெற்று பெய்து வரும் தென் மேற்கு பருவமழையின் காரணமாக நேற்று அணையின் முழு கொள்ளளவை எட்டி மறுகால் விழத்தொடங்கியது. அணைக்கு நிமிடத்திருக்கு 100 காண அடி தண்ணீர் வருகிறது. அது அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இந்த அணையில் 7.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு யூனிட்டுக்கள் உள்ளன. இவை தற்போது மின் உற்பத்தியை செய்து வருகிறது .மேலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட்,ஆகிய 3 மாதங்களும் குற்றாலம் வரும் சுற்றுலாபயணிகள் தென்மலை நீர்தேக்கதிர்க்கு செல்லாமல் திரும்புவதில்லை.

Thenmalai dam reaches FRL

இது கேரளா மாநிலத்திலேயே சிறந்த பொழுது போக்கு நிறைய பெற்ற பகுதியாகும். மேலும் இங்கு படகு போக்குவரத்து இருந்து வந்தது,இந்த படகு போக்குவரத்து சில காரணங்களுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து தினமும் தண்ணீர் குடிக்க யானை,காட்டு எருமைகள்,உள்ளிட்ட மிருகங்களும் வந்து செல்லுவது வழக்கம்.தற்போது ஆணை நிரம்பப் பெற்றுள்ளதால் எல்லையோர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
Kerala's Thenmalai dam, situated near TN border has reached its full reservoir level.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X