For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடப்பாண்டில் மட்டும் 20% சரிவை சந்தித்த இந்திய ரூபாய் மதிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: இந்திய ரூபாயின் மதிப்பு நடப்பாண்டில் மட்டும் 20% சரிவை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பெரும் வீழ்ச்சிக்கு தள்ளிவிட்டிருக்கிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல சரிவை எதிர்கொண்டு வந்து கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வீழ்ச்சியை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவோ மணிக்கொரு வீழ்ச்சியை இந்திய ரூபாய் சந்தித்து வருகிறது.

இன்று இதுவரை இல்லாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு 68ஐ தாண்டிச் சென்றுவிட்டது. விரைவில் இது 70ஐயும் கடக்கும் என்று தெரிகிறது.

1991-ல் 24.4%

1991-ல் 24.4%

நாடு மோசமான பொருளாதார நிலைமையில் இருந்த 1991ஆம் ஆண்டு காலத்தில் ரூபாயின் மதிப்பு 24.4% ஆக சரிந்திருந்தது.

1997-98ல் 19.4%

1997-98ல் 19.4%

இதன் பின்பு பொக்ரான் அணுகுண்டு சோதனை நடைபெற்ற காலத்தில் பொருளாதாரத் தடைகள், தெற்காசிய பொருளாதார மந்த நிலை ஆகியவற்றால் ரூபாய் மதிப்பு 19.4% ஆக குறைந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில்...

கடந்த ஆண்டு டிசம்பரில்...

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதியன்று 54.86 ஆக இருந்தது.

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில்..

நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில்..

ஆனால் தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு 68ஐயும் தாண்டிவிட்டது.

நடப்பாண்டில் 20.7% வீழ்ச்சி

நடப்பாண்டில் 20.7% வீழ்ச்சி

நடப்பாண்டில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 20.7% வீழ்ச்சியை கண்டிருக்கிறது.

ரூ 11 லட்சம் கோடி இழப்பு

ரூ 11 லட்சம் கோடி இழப்பு

ரூபாயின் மதிப்பின் வரலாறு காணாத சரிவால் ரூ11 லட்சம் கோடி பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

தென்னாப்பிரிக்காவின் நாணய மதிப்புதான் அதிக வீழ்ச்சி

தென்னாப்பிரிக்காவின் நாணய மதிப்புதான் அதிக வீழ்ச்சி

தற்போதைய நிலைமையில் தென்னாப்பிரிக்காவின் நாணய மதிப்புதான் 23% வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது

2வது இடத்தில் இந்தியா..

2வது இடத்தில் இந்தியா..

இதைத் தொடர்ந்து இந்தியா 20.7% வீழ்ச்சியுடன் 2வது இடத்தில் இருக்கிறது

3வது இடத்தில் பிரேசில்

3வது இடத்தில் பிரேசில்

நாணய மதிப்பு வீழ்ச்சியில் பிரேசில் 17.6% வீழ்ச்சியுடன் 3வது இடத்தில் இருக்கிறது.

சீனா 2% முன்னேற்றம்

சீனா 2% முன்னேற்றம்

ஆனால் சீனாவில் நாணய மதிப்பானது நடப்பாண்டி 2% முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வெள்ளி விலை உயர்வு

தங்கம் வெள்ளி விலை உயர்வு

நிலையற்ற ரூபாய் மதிப்பு ஒருபுறம் இருக்க 10 கிராம் தங்கத்தின் விலையோ ரூ32.585ஐ எட்டியிருக்கிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ56 ஆயிரமாகியுள்ளது.

ரியல்ஸ் எஸ்டேட்டில் சரிவு

ரியல்ஸ் எஸ்டேட்டில் சரிவு

ரூபாய் மதிப்பு சரிவால் கடந்த ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் சந்தை சரிவை கண்டிருக்கிறது. மும்பை, டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் மதிப்பு சரிந்துள்ளது.

English summary
The rupee on Tuesday hit a record low of 66.30 before closing at 66.19, down 188 paise from Monday's close of 64.31, over concerns that the food security bill would throw government finances into disarray and fears of a US strike against Syria.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X