For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் ஊற்றும்போது திசை திருப்பும் பங்க் ஊழியர்களின் வெட்டிப் பேச்சு.. ஜாக்கிரதை!

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை & பெங்களூர்: பெட்ரோல் போடும்போது உங்களது கண்களை மீட்டரில் இருந்து அகற்றாதீர்கள். ஒரே நொடியில் உங்களை ஏமாற்றுகின்றன பல்வேறு பங்குகள்.

திடீரென உங்களிடம் பேச்சு கொடுப்பார்கள்....

திடீரென உங்களிடம் பேச்சு கொடுப்பார்கள்....

திடீரென உங்களிடம் பேச்சு கொடுப்பார்கள்....

500 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதாக வைத்துக் கொள்வோம். வழக்கமாக நாம் பெட்ரோல் போடும்போது மீட்டரை பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது பெட்ரோல் போடும் நபரோ உடன் இருக்கும் நபரோ திடீரென உங்களிடம் பேச்சு கொடுப்பார்கள்.

ஓடும் மீட்டர் ரீடிங்...

ஓடும் மீட்டர் ரீடிங்...

சார், கார்டா, கேஷா என்பார். அவருக்கு பதில் சொல்ல உங்கள் பார்வையை ஒரு நொடி அகற்றினாலும் மீட்டர் ரீடிங்கை 500 ரூபாய்க்குக் கொண்டு போய் நிறுத்தி விடுகின்றனர். பெட்ரோல் பம்பின் கைப்பிடியை இரண்டு முறை விரலை வைத்து சொடுக்குகின்றனர். அதற்குள் ரீடிங் 500 ரூபாய்க்கு வந்துவிடுகிறது.

சார், பெட்ரா கார்ட் இருக்கா?...

சார், பெட்ரா கார்ட் இருக்கா?...

இன்னும் சில இடங்களில் சார், பெட்ரோ கார்ட் இருக்கா, பாயிண்ட் கிடைக்குமே என்றெல்லாம் கேட்டு நம்மை திசை திருப்புகின்றனர்.

சார் சைன் பண்ணுங்க...

சார் சைன் பண்ணுங்க...

அதே போல கிரெடிட் கார்டோ, டெபிட் கார்டோ தந்துவிட்டு அவர்களிடம் பெட்ரோலோ அல்லது டீசலோ போட்டால், எரிபொருளை போட்டுக் கொண்டிருக்கும்போதே, சார் சைன் பண்ணுங்க என்று ஸ்லிப்பை நீட்டுவர். அந்த நேரத்துக்குள் மீட்டர் ரீடிங்கை ஓட்டிவிடுகின்றனர்.

ஊழியர்கள் உங்களை சுற்றி வளைத்தாலே பிராடுத்தனம்...

ஊழியர்கள் உங்களை சுற்றி வளைத்தாலே பிராடுத்தனம்...

பெட்ரோல் போடும் நபர் தவிர 2,3 ஊழியர்கள் உங்களை சுற்றி வளைத்துக் கொண்டு நின்றாலே ஏதோ பிராடுத்தனம் நடக்கப் போவதாகவே அர்த்தம். ஆளுக்கு ஒரு பேச்சு கொடுத்து உங்களை மீட்டரில் இருந்து திசை திருப்புவதே இவர்களது எண்ணம்.

பேச்சு கொடுத்து திசைதிருப்பி...

பேச்சு கொடுத்து திசைதிருப்பி...

வழக்கமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ஊற்றினால் அதில் 100 மில்லியை சுடும் அளவுக்கு பெட்ரோல் பங்க் மீட்டரில் சூடு வைக்கின்றனர். மேலும் பெட்ரோலில் எதையாவது கலந்து அதன் தரத்தைக் குறைக்கின்றனர். இது தவிர பேச்சு கொடுத்து நம்மை திசைதிருப்பி குறைந்த அளவு பெட்ரோலை, டீசலை ஊற்றி பிராடுத்தனம் செய்வது சமீபகாலமாக அதிகமாகி வருகிறது.

இந்த மோசடி சென்னை, பெங்களூரில் மிக அதிகமாகவே நடக்கிறது. ஜாக்கிரதை!

English summary
Next time when you enter a petrol pump in the city to fill up your vehicle's tank, be more than careful. Customers are being openly duped at various petrol pumps in Bangalore. Take a look at how this is happening. Abhishek, owner of a four-wheeler, went to a petrol pump, where he had asked fuel worth Rs 1000. "But when the meter was reading Rs 700, a staff member of the station came to him to get the credit card bill signed. As I moved my eyes off the meter to sign the bill, the meter read Rs 1,000. I was baffled as four litres of fuel can not be poured in a second," he said, adding that he challenged the staff but the latter tried to convince him that it was okay. When Abhishek continued to insist, he was given the meter receipt and it showed that petrol worth only Rs 731 was actually given.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X