19 லட்சம் இவிஎம்கள் மாயம்! காங் எம்எல்ஏ புகார்! தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்ட கர்நாடக சபாநாயகர்
பெங்களூரு : இந்தியாவில் 19 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காணாமல்போய் இருப்பதாக கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த சபாநாயகர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்போவதாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. பகீர் புகார்
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹெச்.கே.பாட்டில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்விபட்டால் நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள்.

ஆர்.டி.ஐ-யில் அதிர்ச்சித் தகவல்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான தகவலின்படி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடட் நிறுவனம் தயாரித்த 9.64 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா தயாரித்த 9.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் காணாமல் போய்விட்டன, அவை மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்படவில்லை.

19 லட்சம் EVM இயந்திரங்கள் எங்கே?
ஒட்டுமொத்தமாக பார்த்தால் 19 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காணாமல் போய் இருக்கின்றன. ஆனால், அவை எங்கு சென்றன என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மீண்டும் இயக்க முடியுமா? நீங்கள் எல்லாம் எப்படி இவ்வளவு அமைதியாக உள்ளீர்கள்."

”இது மிகப்பெரும் மோசடி”
இதன் பின்னர் பேசிய கர்நாடக முன்னாள் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ், "இது மிகப்பெரிய மோசடி. சபாநாயகர் உடனடியாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும், பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறதா? அப்படி இருந்தால், தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் தனக்கான நம்பகத்தன்மையை இழந்துவிடும்." என்றார்.

”இது மிகப்பெரும் மோசடி”
இதன் பின்னர் பேசிய கர்நாடக முன்னாள் சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ், "இது மிகப்பெரிய மோசடி. சபாநாயகர் உடனடியாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும், பயன்பாட்டுக்கு வழங்கப்பட்ட எண்ணிக்கைக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறதா? அப்படி இருந்தால், தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் தனக்கான நம்பகத்தன்மையை இழந்துவிடும்." என்றார்.

கர்நாடக சபாநாயகர் பேச்சு
இதற்கு பதிலளித்த கர்நாடக சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஹெச்.சி.பாட்டிலிடம் ஆதாரங்களை சமர்பிக்க உத்தரவிட்டார். பின்னர் பேசிய அவர், "எனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து, தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளிக்க உத்தரவிடுகிறேன். உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடை பெற்றுத் தருகிறேன்." என்றார்.

ஆராய்ச்சியாளர்களை பரிசோதனைக்கு அழையுங்கள்
அப்போது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாட்டில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான தனது கவலையை வெளிப்படுத்தினார். "தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க அரசியல் கட்சிகளை மட்டும் அழைக்கக்கூடாது. ஆராய்ச்சியாளர்களை பரிசோதனையின்போது உடன் வைத்திருக்க வேண்டும்." என்றார்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications