Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தப்பு பண்ணிட்டாங்க.." பெங்களூரில் பெற்ற தாயை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற மகள்.. பரபர வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த அர்ச்சனா ரெட்டி என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் இந்த கொலைக்கு பின் இருந்த காரணம் தெரிய வந்துள்ளது.

அர்ச்சனா ரெட்டி கொலை தொடர்பாக போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். பெங்களூரில் பெலந்தூர் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி.

இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பிஸ்னஸ்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் இவரின் முதல் கணவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து ஆகிவிட்டது.

ஜிம் பயிற்சி

ஜிம் பயிற்சி

இதையடுத்து அர்ச்சனா ரெட்டி கடந்த சில மாதங்களாக நவீன் என்ற ஜிம் பயிற்சியாளருடன் வாழ்ந்து வந்தார். அர்ச்சனா ரெட்டி - நவீனுடன் அர்ச்சனா ரெட்டியின் முதல் கணவருக்கு பிறந்த மகனும் மகள் யுவிகாவும் (21) ஒன்றாக வசித்து வந்தனர். இவர்கள் குடும்பத்தில் பெரிதாக பிரச்சனை எல்லாம் இல்லை.

பெங்களூர் கொலை

பெங்களூர் கொலை

இந்த நிலையில்தான் கடந்த 27ம் தேதி இரவு ஹொஸா சாலை பகுதியில் அர்ச்சனா ரெட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசார் இதையடுத்து வழக்கு பதிவு செய்தனர். இதில் சிசிடிவி காட்சி அடிப்படையில் அர்ச்சனா ரெட்டியை அவரின் மகள் யுவிகா கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அர்ச்சனா ரெட்டி கொலை

அர்ச்சனா ரெட்டி கொலை

இதையடுத்து போலீசார் யுவிகாவிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி பின்னணி அம்பலம் ஆனது. அதன்படி அர்ச்சனா ரெட்டியின் இரண்டாவது கணவர் நவீனுடன் யுவிகா தகாத உறவில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததை அறிந்துகொண்டு அர்ச்சனா ரெட்டி அவர்களை கண்டித்து இருக்கிறார். அவர் உனக்கு அப்பா மாதிரி.. இப்படி செய்யாதே என்று கண்டித்துள்ளார்.

பணம் தரவில்லை

பணம் தரவில்லை

இதனால் யுவிகா மீது கோபமாக இருந்த அர்ச்சனா ரெட்டி அவருக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி உள்ளார். ஆனால் யுவிகாவோ தனக்கு சொத்தில் பாதி வேண்டும் என்று கூறி அர்ச்சனா ரெட்டியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இந்த சண்டை முற்றவே யுவிகா நவீனுடன் சேர்ந்து அர்ச்சனா ரெட்டியை கொலை செய்துள்ளார்.

கொலை

கொலை

அர்ச்சனா ரெட்டியின் இரண்டாவது கணவர் நவீன், மகள் யுவிகா இருவரும் இதனால் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர். நான் சொத்தை கேட்டப்ப கொடுக்கல.. என்னையும் நவீனையும் பிரிக்க பார்த்தாங்க. அதனால்தான் இப்படி செய்தேன் என்று யுவிகா போலீஸ் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். கொலைக்கு உடந்தையாக இருந்த சந்தோஷ் குமார், அனுபம் சின்கா, நரேந்திரா, ஆனந்த் ஆகியோர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+