சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
பெங்களூர்: 'காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையா அல்லது முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கையா’ என்ற தலைப்பில் பாஜக சமூக ஊடகங்களில் போட்ட பதிவிற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையம் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் மல்லேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியின் பறக்கும் படையினர் பாஜகவின் சமூக வலைதள பக்கத்தின் பதிவிற்காக எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி இன்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி கடந்த வாரம் ஷஹரான்பூர், ஆஜ்மீரில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் முத்திரையுடன் இருக்கிறது. அது சிறுபான்மையினரை சமாதானப்படுத்தும் அரசியலை செய்கிறது” என விமர்சித்திருந்தார். தொடர்ந்து சத்தீஸ்கரில் நடந்த பிரச்சாரத்திலும் அதே கருத்தை முன்வைத்திருந்தார்.
இது ஒருபுறம் எனில் நேற்று (ஏப்ரல் 23) பாஜகவின் அதிகாரப்பூர்வக சமூக வலைதள பக்கத்தில், 'காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அல்லது முஸ்லீம் லீக்கின் தேர்தல் அறிக்கையா’ என்ற தலைப்பில் என்று பதிவிடப்பட்டிருந்தது .
பாஜகவின் இந்த பதிவில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அமலாக்கம்.
முஸ்லிம்களுக்கு சொத்து பகிர்வு.
முஸ்லிம்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு.
தனிப்பட்ட சட்டங்களைப் பயிற்சி செய்வதற்கான சுதந்திரம்.
முஸ்லிம்கள் நேரடியாக நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் என்ற பதிவுடன் காங்கிரஸை விமர்சித்து பாஜக பதிவிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் பாஜக மீது காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.இந்த புகாரின் பேரில் “இந்திய தண்டனைச் சட்டத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 125 மற்றும் 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதலைத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இன குடிமக்களுக்கும் இடையே வெறுப்பு மற்றும் பகைமையை ஊக்குவிக்கும் வகையில் பதிவிட்டதாகவும் பாஜக மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மல்லேஸ்வரம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளார்கள். கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி இந்த தகவலை தெரிவித்தார்.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறற உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான பிச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications