கர்நாடக ஹைகோர்ட்டில் நாளையும் தொடருகிறது ஹிஜாப் தடையை எதிர்த்த வழக்கு விசாரணை
பெங்களூரு: ஹிஜாப் அணிய தடை விதிப்பதை எதிர்த்த வழக்கு விசாரணையை நாளை மதியம் 2.30 மணிக்கு கர்நாடக ஐகோர்ட் நீதிபதி ஒத்திவைத்தார்.
உடுப்பி மகாத்மா காந்தி நினைவு கல்லுாரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து சென்றனர். இதையடுத்து ஹிந்து ஜகரானா வேதிகே அமைப்பை சேர்ந்த சில மாணவிகள் காவி ஷால் அணிந்து கல்லூரிக்குள் நுழைந்தனர். ஹிஜாப் அணிந்துள்ள மாணவிகள் அதை அகற்ற கோரிக்கை வைத்தனர்.
கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாணவிகள் ஹிஜாப்பை அகற்றினர்.
இதன் தொடர்ச்சியாக பல இடங்களில் சர்ச்சை உருவானது. குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லுாரி, பஸ்ரூரில் உள்ள சாரதா கல்லுாரி, பைந்துார் அரசு ஜூனியர் கல்லுரியிலும் ஹிஜாப், காவி ஷால் அணிதல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது.

போட்டி போராட்டம்
குந்தாப்புரா உள்ள ஆர்.என். ஷெட்டி பி.யூ. கல்லூரியில் தொடர் போராட்டம் நடந்தது. இதையடுத்து கல்லூரி மூடப்பட்டது. மண்டியா பல்கலைக்கழகத்தில் 50 பேர் காவி ஷால் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் விஜயநகர், சிவமொக்கா, கலபுரகி, விஜயாப்புரா, கதக் மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு போட்டியாக சிக்மகளூரு ஐ.டி.எஸ்.ஜி., அரசு பஸ்ட் கிரேட் கல்லுாரியில் பகுஜன் வித்யார்த்தி சங்கம் எனும் மாணவர் அமைப்பினர் நீல நிற ஷால் அணிந்து ஹிஜாப் அணியும் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து போராடினர். மேலும் பெங்களூரு, பத்ராவதியிலும் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடந்தது. மைசூரில் கர்நாடக மாநில மகளிர் அமைப்பினர் சார்பிலும் ஹிஜாப் அணியும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஐகோர்ட்டில் விசாரணை
தொடர் போராட்டங்களா் சில கல்லூரி நிர்வாகங்கள், ‛ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரலாம். ஆனால் வகுப்பறையில் அதை அகற்ற வேண்டும்' என வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சீருடை கட்டாயம் அணிய வேண்டும் என அரசு சார்பில் அவர் உத்தரவிட்டார். இந்த விவகாரம் கர்நாடகத்தில் விஷ்வரூபம் எடுத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பியை சேர்ந்த மாணவிகள் தொடர்ந்த வழக்கு பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

பகவத் கீதை
நீதிபதி கிருஷ்ணா தீக்சித் விசாரித்தார். அப்போது அவர், ‛‛அரசிலமைப்பு சட்டம் எனக்கு பகவத் கீதை போன்றது. நான் அரசியலமைப்பு சட்டத்தின் மீது பிரமாணம் செய்துள்ளேன். உணர்ச்சிகளை ஓரம்கட்டிவிட்டு அரசியலமைப்பு சொல்வது போல் நடந்து கொள்ள வேண்டும்.'' எனக்கூறினார். பின்னர் விசாரணையை மாலை 3 மணிக்கு ஒத்திவைத்தார். மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் கே.நாவடி வாதாடினர். இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி, அதை பதிவு செய்து கொண்டார்.
Recommended Video

ஒத்திவைப்பு
பின்னர் வழக்கு விசாரணையை நாளை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைத்தார். மேலும் மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களின் அறிவு, நல்லொழுக்கம் மீது நம்பிக்கை உள்ளதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார். இதற்கிடையே பதற்றமான சூழல் நிலவுவதால் மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலைபள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளஅார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications