Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிஜாப் வழக்கு Live: ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமில்லை கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

ஹிஜாப் விவகாரம் குறித்து இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் கர்நாடகாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று காலை 10.30 மணிக்கு ஹிஜாப் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் ஞானேந்தர் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த மாதம் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய பிரச்சனை உருவானது. அங்குள்ள அரசு கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த போது வகுப்பில் அமர கூடாது என கல்லூரி நிர்வாகம் கூறியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்வா மாணவ-மாணவியர்களை சிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கினர்.

Hijab case judgment LIVE Update: Karnataka High court to give verdict today

Mar 15, 2022, 10:53 am IST

ஹிஜாப் அணிய அனுமதி கேட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் அப்பீல் செய்ய வாய்ப்பு
Mar 15, 2022, 10:52 am IST

ஹைகோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி. தீர்ப்புக்கு எதிராக யாராவது கலவரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை
Mar 15, 2022, 10:51 am IST

BREAKING | ஹிஜாப் வழக்கு - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
Mar 15, 2022, 10:45 am IST

ஹிஜாப் இஸ்லாமிய மதத்தின் அடிப்படை அவசியம் கிடையாது - கர்நாடக உயர் நீதிமன்றம். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும்
Mar 15, 2022, 10:43 am IST

அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க பெங்களூரு, மங்களூரு, கடலோர மாவட்டங்கள் உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்
Mar 15, 2022, 10:43 am IST

உள்துறை அமைச்சர் ஞானேந்தர் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Mar 15, 2022, 10:43 am IST

தீர்ப்பு காரணமாக 5 பேருக்கு மேல் கூடுவதற்கோ, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கோ அனுமதி இல்லை
Mar 15, 2022, 10:43 am IST

பாதுகாப்பு பணியில் கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை உள்பட 10 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
Mar 15, 2022, 10:40 am IST

ஹிஜாப் விவகார வழக்கில் தீர்ப்பு வெளியான பின்பும் பெங்களூரு மக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+