ஹிந்தியை திணிக்க முயலும் பாஜக! அமித்ஷா நிகழ்ச்சி பேனரால் மீண்டும் புகையும் கர்நாடகா!கடும் எதிர்ப்பு!
பெங்களூர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் மீண்டும் கர்நாடகத்தில் ஹிந்தி திணிப்பு பிரச்சனை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதில் திமுக முன்னிலையில் உள்ளது. இதேபோல் கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் ஹிந்தி திணிப்பு எனக்கூறி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக ஏப்ரல் மாதம் டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் ஹிந்தி மொழி குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது.

இணைப்பு மொழியாக ஹிந்தி
இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது, ‛‛அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக இணைப்பு ஏற்க வேண்டும்'' என விருப்பம் தெரிவித்து இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி தமிழகம், கர்நாடகத்தில் போராட்டங்கள் நடந்தன. மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிப்பதாக குற்றங்கள் சாட்டப்பட்டதோடு, ரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்துக்கள் தார்ப்பூசி அழிக்கப்பட்டன. குறிப்பாக தென் இந்திய மாநிலங்களில் தான் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

பெங்களூரில் அமித்ஷா
இந்நிலையில் தான் மீண்டும் அமித்ஷாவால் ஹிந்தி திணிக்கப்படுவதாக பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின விழா ஆண்டையொட்டி மத்திய கலாச்சாரத்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கர்நாடக தலைநகர் பெங்களூரில் 'சங்கல்ப் சித்தி' நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

பேனரில் ஹிந்தி
இந்நிலையில் தான் நிகழ்ச்சியில் இடம்பெற்ற பேனரில் முழுவதும் ஹிந்தியில் இருந்துள்ளது. தற்போது இந்த பேனர் படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்தில் கன்னட மொழி பேசும் நிலையில் அமித்ஷா தனது நிகழ்ச்சி மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனை கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கன்னட மொழிக்கு அவமரியாதை
கர்நாடகா முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் பாஜகவினர் இணைந்து மீண்டும் மீண்டும் ஹிந்தியை திணித்து கன்னட மொழிக்கும், கர்நாடகத்துக்கு அவமரியாதை செய்கின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற சங்கல்ப் சித்தி நிகழ்ச்சியின் பேனர் முழுவதும் ஹிந்தி மயமாக உள்ளது. மற்றொரு புறம் கன்னடா மற்றும் கலாச்சாரத்துறையின் இணையதளத்தில் ஹிந்தி மொழியில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

தன்மானத்தை அடகு வைக்காதீங்க
கர்நாடக பாஜகவினர் தன்மானத்தை அடகு வைத்து ஹிந்தி மொழிக்காக மத்திய அரசிடம் சரணடைந்து விட்டனர். இதற்கு கன்னடா மற்றும் கலாச்சாரத்துறை இணையதளத்தில் உள்ள ஹிந்தி விளம்பரமே சாட்சி. முதலில் இதனை நீக்கவிட்டு கன்னட மொழி பற்றாளராக நடந்து கொள்ளுங்கள். மேலும் மாநிலத்தில் இருப்பது கன்னடா மற்றும் கலாச்சாரத்துறை துறையா? அல்லது ஹிந்தி கலாச்சார துறையா? என்பதை முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் துறை அமைச்சர் சுனில் குமார் கார்கலா ஆகியோர் நிரூபிக்க வேண்டும். 2 ஆயிரம் ஆண்டு பழமையான கன்னட மொழியை கன்னடா மற்றும் கலாசாரத்துறையே புறக்கணித்து ஹிந்தி மொழி பிரசாரத்துக்கு இறங்கினால் கன்னட மொழியை பாதுகாப்பது யார்?. அதிகாரத்தை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக தன்மானத்தை அடகு வைக்க வேண்டாம்'' என கடுமையாக சாடியுள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications