Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊபர் டிரைவரிடமிருந்து வந்த ஒரு மெசேஜ்.. உற்று பார்த்து உடனே ட்ரிப் கேன்சல் செய்த பெண்.. ஏன் தெரியுமா?

பெங்களூரில் ஊபர் வாடகை கார் டிரைவர் அனுப்பிய ஒரு மெசேஜால் பெண் வாடிக்கையாளர் ட்ரிப் கேன்சல் செய்தார். தற்போது அது இணையதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் பெண் ஒருவர் ஊபர் காரில் பயணிக்க முன்பதிவு செய்தார். ஆனால் ஊபர் கார் டிரைவர் பெண் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அந்த மெசேஜை உற்றுப்பார்த்த பெண் உடனே ட்ரிப் கேன்சல் செய்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் தான் அந்த ஊபர் டிரைவருக்கும், பெண் வாடிக்கையாளருக்கும் இடையே நடந்த சார்ட் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் ஊபர் டிரைவரையும், அந்த பெண்ணையும் பாராட்டி வருகின்றனர். அப்படி என்ன நடந்தது?

இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்ல வாடகை ஸ்கூட்டர், வாடகை கார்க வசதிகள் உள்ளன.

பெங்களூர், மும்பை, டெல்லி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் ஓலா, ஊபர் உள்பட ஏராளமான நிறுவனங்களின் வாடகை கார் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன.

ஓலா, ஊபர் கார்கள்

ஓலா, ஊபர் கார்கள்

இந்த பயன்பாட்டை பெற பொதுமக்கள் தங்களின் செல்போனில் அதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டால் போதும். இருந்த இடத்தில் இருந்து கொண்டே வாடகை காரை சில நிமிடங்களில் வரவழைத்து சொகுசு பயணம் செய்ய முடியும். இதனால் தற்போது இந்த வாடகை கார்களின் பயன்பாடு என்பது இளம்வயதினர் முதல் அனைத்த வயதினர் மத்தியிலும் அதிகரித்து வருகிறது. ஊபர், ஓலா காரை புக் செய்வது மிகவும் எளிது என்றாலும் குறித்த நேரத்தில் டிரைவர்கள் வருவது மட்டுமே கொஞ்சம் சவாலானது. இந்த பிரச்சனை பல சமயங்களில் ஏற்படாவிட்டாலும் சில வேளைகளில் மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

பெங்களூரில் பயன்பாடு

பெங்களூரில் பயன்பாடு

நம் ஆண்டை மாநிலமான கர்நாடகா தலைநகர் பெங்களூரிலும் ஓலா, ஊபர் நிறுவனங்களின் வாடகை கார் பயன்பாடு உள்ளது. பீக் ஹவர்ஸ் எனும் காலை மற்றும் மாலை நேரங்களில் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவும். இந்த வேளையில் அருகருகே வீடுகளில் வசித்துகொண்டு ஒரே நிறுவனத்தில் வேலை செய்யும் பலரும் வாடகை கார்களில் பயணித்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் வாடகை கார் பயன்படுத்தும் நகரங்களின் பெங்களூருவும் முக்கிய இடம் பிடித்துள்ளது.

டிரைவர் மெசேஜால் கேன்சல் செய்த பெண்

டிரைவர் மெசேஜால் கேன்சல் செய்த பெண்

இந்நிலையில் தான் தற்போது பெங்களூரில் வாடகை கார் டிரைவருக்கும், வாடிக்கையாளருக்கும் நடந்த Chat தொடர்பான ஸ்கீரின் ஷாட் இணையதளத்தில் பரவி வருகிறது. இதில் வாடகை கார் டிரைவரின் மெசேஜை ஊற்றுப்பார்த்த அந்த பெண் வாடிக்கையாளர் உடனடியாக ட்ரிப் கேன்சல் செய்துள்ளார். அப்படி என்ன அந்த டிரைவர் மெசேஜாக அனுப்பினார் என கேட்கிறீர்களா? இதோ உங்களுக்கான பதில்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

அதாவது, பெண் வாடிக்கையாளர் ஒருவர் ஊபர் வாடகை காரை முன்பதிவு செய்கிறார். இதனை டிரைவர் ஏற்ற நிலையில் அவருக்கு தூக்கம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கேன்சல் செய்ய விரும்புகிறார். இதையடுத்து டிரைவர் வாடிக்கையாளருக்கு ‛‛இந்த பயணத்தை ரத்து செய்ய முடியுமா? நான் தூக்கத்தில் இருக்கிறேன்'' என கேட்க வாடிக்கையாளர் மறுபேச்சு பேசாமல் ஓகே என அனுப்பி ட்ரிப் கேன்சல் செய்துள்ளார். இதில் டிரைவரின் பெயர் பரத் ஆகும். பெண் வாடிக்கையாளரின் பெயர் ஆசி என்பதாகும்.

ட்விட்டரில் பகிர்வு

ட்விட்டரில் பகிர்வு

தற்போது இந்த Chat தொடர்பான ஸ்கீரின் ஷாட் ட்விட்டரில் டிரெண்ட்டாகி வருகிறது. ஆசி தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கமெண்ட் செய்து வருகின்றனர். உண்மையை கூறிய டிரைவருக்கும், அவரது கோரிக்கையை ஏற்ற வாடிக்கையாளருக்கும் வாழ்த்துகள் என பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பலரும் கேப் டிரைவர்கள் உடனான தங்களின் மோசமான மற்றும் மகிழ்வான சம்பவங்களை கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர்.

கமெண்ட்டுகள் என்னென்ன?

கமெண்ட்டுகள் என்னென்ன?

இதுபற்றி ஒருவர், ‛‛தூக்கத்தில் இருப்பதை தெரிவிப்பது என்பது டிரைவர்களின் முக்கிய பொறுப்பு என நினைக்கிறேன். நான் ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கு அம்மாவுடன் பயணித்தேன். அப்போது, ​​நரசிம்ம ராவ் விரைவு சாலையில் வாடகை காரில் சென்றபோது டிரைவர் உண்மையிலேயே தூங்கிவிட்டார். இதையடுத்து சவாரியை முடித்து கொள்ளலாமா? என கேட்டேன்'' என வாடகை கார் டிரைவரின் தூக்கம் தொடர்பாக அவர் சந்தித்த பிரச்சனையை தெரிவித்து இருந்தார். இன்னொரு நபரோ வேடிக்கையாக கருத்து தெரிவித்து இருந்தார். இதுபற்றி அவர், ‛‛நான் ஒருமுறை வாடகை கார் பதிவு செய்தேன். அக்சப்டும் ஆனது. இருப்பினம் 5 நிமிடமாக அந்த கார் நகரவே இல்லை. இதையடுத்து போன் செய்து கேட்டேன். அப்போது அவர் உங்களின் அழைப்புக்காக காத்திருந்தேன்'' என தெரிவித்துள்ளார்.

முன்பு நடந்தது என்ன?

முன்பு நடந்தது என்ன?

ஊபர் கார் டிரைவருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே நடக்கும் சார்ட்டுகள் இணையதளத்தில் பேசும்பொருளாவது இது முதல் முறைல்ல. இதற்கு முன்பு அதாவது கடந்த ஆண்டு மே மாதம் ஊபர் டிரைவர், ‛‛100 சதவீதம் வருவேன். தற்போது நான் பரோட்டா சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன். பாதி மட்டுமே உள்ளது. கொஞ்சம் காத்திருக்க வேண்டும்'' என உண்மையை கூறியது இணையதளங்களில் வேகமாக பரவியது. தற்போது அதேபோல் தூக்கத்தில் இருக்கிறேன். பதிவை கேன்சல் செய்யுங்கள் என ஊபர் டிரைவர் தெரிவித்துள்ளது இணையதள வாசிகள் மத்தியில் பேசும்பொருளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+