எட்டே மாசம்.. எகிறும் கர்நாடகா “தேர்தல் ஜுரம்”! ரேசில் முந்தும் “டிகே”! ஒரே சாதிக்குள் போட்டி

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 8 மாதங்களில் நடைபெற இருக்கும் சூழலில் கவுடா சமுதாயத்தை சேர்ந்த 2 தலைவர்கள் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தது காங்கிரஸ்.

இதனால் பதவியேற்ற முதல்நாளே எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பே பதவியும் விலகினார். குமாரசாமி முதலமைச்சரானா. ஆனால், அடுத்த ஆண்டே 2019 ல் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கவர்ந்த பாஜக அவர்களை பதவி விலக செய்தது.

ஆட்சியை பிடித்த பாஜக

ஆட்சியை பிடித்த பாஜக


இதன் மூலம் ஜேடியு - காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது. எடியூரப்பா தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த ஆண்டு எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து பசவராஜ் பொம்மை மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்த சூழலில் வரும் 2023 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

 அமைதியிழந்த கர்நாடகா

அமைதியிழந்த கர்நாடகா

பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே, அங்கு மத ரீதியிலான வன்முறைகள் தலைதூக்கியுள்ளன. குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே ஹிஜாப் பிரச்சனை, ஹலால் பிரச்சனை, ஒலிப்பெருக்கி சர்ச்சை, இஸ்லாமிய வியாபாரிகள் புறக்கணிப்பு என அடுத்தடுத்து கிளம்பிய பிரச்சனைகளால் அம்மாநிலமே அமைதியிழந்து காணப்படுகிறது.

 பாஜகவுக்கு எதிரான அலை

பாஜகவுக்கு எதிரான அலை

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பாஜக பிரமுகர் கொல்லப்பட்டதை தொடர்ந்து அக்கட்சியிலிருந்து தொண்டர்கள் பலர் விலகியது, அண்மையில் தலைநகர் பெங்களூருவில் ஏற்பட்ட பெருவெள்ளம் என பாஜக அரசுக்கு எதிரான மனநிலை கர்நாடகத்தில் அதிகரித்துள்ளது. அத்துடன் மாநில பாஜகவில் பசவராஜ் பொம்மைக்கு எதிராக ஏற்பட்டுள்ள மனநிலையும் தலைவலியை கொடுத்துள்ளது.

 கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தின் மூலம் தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளாவில் ஆட்சியை பிடிக்க திட்டமிடும் பாஜக ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் கர்நாடகத்தை இழக்க விரும்பவில்லை. இந்த நிலையில் 2023 தேர்தல் நெருங்கும் சூழலில் அதுகுறித்த கருத்துக்கணிப்பை பாஜக நடத்தியது. அப்போது 70 முதல் 80 இடங்களை மட்டுமே வெல்லும் என்று வெளியான முடிவால் கட்சித் தலைமை அதிர்ச்சியில் உள்ளது.

காங்கிரஸ் VS ஜேடிஎஸ்

காங்கிரஸ் VS ஜேடிஎஸ்

இது ஒருபுறம் இருக்க காங்கிரஸும், குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை எதிர்க்க இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என வெளிமாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இரு கட்சிகளுமே கூட்டணியை விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

டிகே சிவக்குமார்

டிகே சிவக்குமார்

ஆனால், காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டிகே சிவகுமாருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ஆனால், தேசிய காங்கிரஸ் தலைமை சிவக்குமாரையே விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிவக்குமார் ஒக்கலிகா எனப்படும் கவுடா சமுதாயத்தை சேர்ந்தவர். குமாரசாமியும் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்.

 ஒரே சாதி

ஒரே சாதி

கடந்த 4 ஆண்டுகளில் சித்தராமையா, குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை என 4 முதலமைச்சர்களை கர்நாடகா பார்த்து உள்ளது. ஏற்கனவே லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா, குருபா சமுதாயத்தை சேர்ந்த சித்தராமையா முதலமைச்சர் போட்டியைவிட்டு ஏறத்தாழ ஒதுங்கிவிட்ட நிலையில் ஒக்கலிகா கடவுடா சாதியை சேர்ந்த இருவருக்குள் இம்முறை போட்டி அதிகம் நிலவும் வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸுக்கு வாய்ப்பு

காங்கிரஸுக்கு வாய்ப்பு

கவுடா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மைசூர், மாண்டியா, ஹாசன், ராம்நகர், கோலார், சிக்பல்லாபூர், சிக்மக்ளூர், ஷிமோகா, பெங்களூரு ஆகிய தெற்கு கர்நாடகா பகுதியில் அதிகம் வசிப்பவர்கள். இதில் குமாரசாமியின் ஆதரவு படிப்படியாக குறைந்து வருவது கடந்தகால தேர்தல் தோல்விகளில் இருந்து தெரிகிறது. அதேநேரம் அவரது மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் பலர் டிகே சிவக்குமார் பின்னால் சென்றுள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+