பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதுவும் 'லிப் டூ லிப்..' இளைஞரால் டென்ஷனான நாகப் பாம்பு.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

Google Oneindia Tamil News

பெங்களூர்: பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற இளைஞரை அந்த பாம்பு உதட்டில் கடித்து வைத்ததில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாம்பை பிடிக்கப் போன போது, கெத்தாக ஏதாவது செய்ய நினைத்து இளைஞர் செய்த காரியும் அவரது உயிருக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

மிகவும் ஆபத்தாக கருதப்படும் பாம்பை எவ்வாறு கையாள வேண்டும் என பல அறிவுறுத்தல்களை அரசாங்கமும், அதிகாரிகளும் வழங்கி வரும் போதிலும், பப்பிளிசிட்டிக்காக சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பின்னர் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

சாலையின் குறுக்கே கிடந்த10 அடி நீள பாம்பு.. ஒரே செகண்ட் தான்..அலேக்காக தூக்கிய நபர்.. பரவும் வீடியோ!சாலையின் குறுக்கே கிடந்த10 அடி நீள பாம்பு.. ஒரே செகண்ட் தான்..அலேக்காக தூக்கிய நபர்.. பரவும் வீடியோ!

உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்

உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்

உலகில் 3000-க்கும் அதிகமான பாம்பு வகைகள் உள்ளன. அவற்றில் 600 வகை பாம்புகளுக்கு மட்டுமே விஷம் உள்ளது. அதாவது 20 சதவீதம் மட்டும் தான். அதிலும் மனிதர்களை கொல்லக்கூடிய விஷம் கொண்ட பாம்புகள் வெறும் 7 சதவீதம் மட்டுமே உள்ளன. ஆனால் பாம்பு கடித்தால் அதன் விஷம் ஏறி உயிரிழப்பவர்களை காட்டிலும், பாம்பு கடித்துவிட்டதே என்ற பயத்தில் இறப்பவர்களே அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உலகிலேயே இந்தியாவில்தான் பாம்புக் கடிக்கு அதிகம் பேர் உயிரிழக்கின்றனர். ஆண்டொன்றுக்கு 11,000 பேர் இந்தியாவில் பாம்புக் கடியால் மரணம் அடைவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எதேச்சையாக பாம்பு கடித்து உயிரிழப்பவர்கள் ஒருபுறம் என்றால், பாம்பை தேடிச்சென்று வலுக்கட்டாயமாக கடிபட்டு உயிரிழப்பவர்கள் மறுபுறம் இருக்கின்றனர். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் கர்நாடகாவில் நடந்துள்ளது.

மக்களை அலறவிட்ட நாகப்பாம்பு

மக்களை அலறவிட்ட நாகப்பாம்பு

கர்நாடகா மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (28). இவரும் இவரது நண்பரான ரோமியும் அந்த மாவட்டத்திலேயே பாம்பு பிடிப்பதில் கைத்தேர்ந்தவர்கள் ஆவர். எந்த வீட்டில் பாம்பு வந்தாலும், ஷிவமொக்கா மக்கள் முதலில் தொடர்புகொள்வது இவர்கள் இருவரை தான். அந்த அளவுக்கு அவர்கள் அந்த மாவட்டத்தில் பிரபலமாக இருந்தனர். இந்நிலையில், அங்குள்ள பத்ராவதி பகுதியில் ஒரு வீட்டில் சில தினங்களுக்கு முன்பு அதிக விஷம் கொண்ட நாகப்பாம்பு வந்துள்ளது. இதை அறிந்த அந்த வீட்டில் உள்ளவர்கள், பாம்பை அடிக்க முயன்றனர். ஆனால் அது தப்பித்து வெளியேறியது. எனினும், அந்த தெருவில் எங்கோ ஒரு இடத்தில் பதுங்கி இருந்த அந்தப் பாம்பு, அவ்வப்போது அங்கு சுற்றிவந்தது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறவே பயந்து போயிருந்தனர்.

 பாம்புக்கே லிப் டூ லிப்பா..?

பாம்புக்கே லிப் டூ லிப்பா..?

இந்த சூழ்நிலையில்தான், அவர்கள் அந்த பாம்பை பிடிக்க அலெக்ஸையும், ரோமியையும் தொடர்பு கொண்டனர். இதன்பேரில் நேற்று அங்கு வந்த இருவரும், பாம்பை தேடி சுற்றித்திரிந்தனர். ஒருவழியாக பாம்பும் அவர்களின் கண்ணில் பட்டுவிட்டது. இதையடுத்து, அந்த பாம்பை துரத்திச் சென்ற அலெக்ஸ் அதை லாவகமாக பிடித்துவிட்டார். சுமார் 4 அடி நீளம் இருந்த அந்த பாம்பை அவர் கையில் தூக்கிக் கொண்டு அந்த தெருவை சுற்றி வந்தார். மக்களும் அதை ஆர்வமாக வேடிக்கை பார்த்து கைத்தட்டினர். ஒருகட்டத்தில், மக்களின் கைத்தட்டலில் மயங்கிப்போன அலெக்ஸ், அந்த பாம்பை பைக்குள் போடுவதற்கு முன்பு அதன் வாயில் ஆசையாக முத்தமிட முயன்றார். 'சிவனேனு போய்ட்டு இருந்தவன பிடிச்சதும் இல்லாம முத்தமா கொடுக்க வர..' என்ற ரேஞ்சில் நினைத்த நாகப்பாம்பு, கண்ணிமைக்கும் நேரத்தில் அலெக்சின் உதட்டில் பட்டென கடித்தது.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இதனால் அதிர்ச்சியடைந்த அலெக்ஸ், தனது கையில் இருந்த பாம்பை கீழே போட்டார். உடனே தப்பிக்க முயன்ற அந்த பாம்பை அவரது நண்பர் ரோமி பிடித்து பைக்குள் போட்டார். பாம்பிடம் கடி வாங்கிய அலெக்ஸ், ஒரு சில நிமிடங்கள் அப்படியே நின்றிருந்தார். பின்னர் மயக்கமடைந்தார். இதையடுத்து அவரது நண்பர் ரோமியும், அங்குள்ளவர்களும் அலெக்ஸை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

English summary
In a shocking incident in Karnataka, A cobra snake had bitten a man in his lips after he tried to kiss the snake which he caught. He is now stable in hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X