பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீயாய் பரவும் கொரேனா... கர்நாடகாவில் 14 நாட்கள் முழு லாக்டவுன் - முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடகாவில் ஏப்ரல் 27 முதல் மே 10ஆம் தேதி வரை லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பிஎஸ் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்தும் விதத்தில் நாளை முதல் 14 நாட்களுக்கு லாக் டவுன் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் பிஎஸ் எடியூரப்பா அறிவித்துள்ளார். சூழ்நிலை முற்றிலும் சரியில்லை என்றும் டெல்லி, மும்பையை விட மோசமான சூழ்நிலை நிலவுவதால் வேறு வழியின்றி லாக்டவுன் அமல்படுத்தப்படுவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் தினசரியும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை எட்டியுள்ளது. வார விடுமுறை நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டும் அங்கு 34,804 பேருக்கு புதிய தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு 2,62,162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,492 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Karnataka State announces 14 days lock down No public transport

பெங்களூருவில் மட்டும் புதிதாக 20733 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளன. கொரோனாவிற்கு தினசரியும் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்து வருகின்றனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைப் பார்த்து அம்மாநில முதல்வர் பி.எஸ் எடியூரப்பா முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

இன்று முதல் மே 10ஆம் தேதி வரைக்கும் மாநிலம் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்றும் பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்றும் அறிவித்துள்ளார். ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தவிர பிற தொழில் நிறுவனங்கள் இயங்கும்.

ஆக்சிஜன் இல்லை... கைவிரித்த பெங்களூரு மருத்துவமனை.. சென்னைக்கு பறந்த ஆம்புலன்ஸ்.. திக் திக் பயணம்ஆக்சிஜன் இல்லை... கைவிரித்த பெங்களூரு மருத்துவமனை.. சென்னைக்கு பறந்த ஆம்புலன்ஸ்.. திக் திக் பயணம்

அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 10 மணிக்கும் திறந்திருக்கும் தனியார், சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

English summary
Karnataka State announces 14 days lock down From tomorrow. No public transport. Morning 6 to 10 Shops will be open. Except garments all manufacturing allowed. No public transport
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X