Lottery: மகள் பிறந்த யோகம்.. லாட்டரியில் அடித்த 49 கோடி! கர்நாடக வாலிபருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம்! பணமழைதான்
பெங்களூர்: மகள் பிறந்த நேரம் அதிர்ஷ்ட மழை கொட்டியுள்ளது என லாட்டரியில் ரூ.49 கோடி பரிசுத் தொகை வென்றுள்ள கர்நாடக நபர் சாந்தனு தெரிவித்துள்ளார். ஓமனில் பணிபுரிந்து வரும் அவர் நண்பர்களுடன் சேர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கியிருக்கிறார். இதில் முதல் பரிசாக 49 கோடி ரூபாய் பரிசு அடித்து இருப்பதால் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறாராம்.
49 கோடி ரூபாயை என்ன செய்வது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. எனது நண்பர்களுடன் இந்த தொகையை பகிர்ந்து கொள்ள உள்ளேன். பரிசு விழுந்த தகவல் கிடைத்ததும் எனக்கு பேச வார்த்தைகளே வரவில்லை. இன்னும் நான் இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்று சாந்தனு தெரிவித்துள்ளார்.

உடுப்பி காட்பாடி பகுதியை சேர்ந்தவர்
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள காட்பாடி மட்டு பகுதியை சேர்ந்தவர் சாந்தனு மட்டு. ஓமனில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வரும் சாந்தனுக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.
வாழ்க்கையில் ஒருநாளாவது நமக்கும் அதிர்ஷ்டம் அடிக்காதா? என்ற எதிர்பார்ப்பில் லாட்டரி வாங்கி வந்து இருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை அங்கு பிக் டிக்கெட் லாட்டரி மிகவும் பிரபலமாக உள்ளது.
49 கோடி ரூபாய் பரிசு
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் சிலரும் இந்த டிக்கெட்டை வாங்கி தங்களுக்கு யோகம் அடிக்கிறதா என்று முயற்சித்து பார்ப்பார்கள். அப்படித்தான் சாந்தனுவும் தனது நண்பருடன் 20 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 49 கோடி) பரிசுத்தொகை கொண்ட லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் சாந்தனு வாங்கிய 305810 என்ற லாட்டரி டிக்கெட்டிற்கு முதல் பரிசு விழுந்துள்ளது. பிக் டிக்கெட் குலுக்கல் முடிந்ததும் அதற்கான அறிவிப்பை வெளியிட்ட பரிசு குழுவினர் சாந்தனுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தனர். தனக்கு முதல் பரிசு அடித்த தகவல் கிடைத்ததும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த சாந்தனு நடப்பது நிஜமா? இல்லை கனவா என ஒருமுறை திகைத்து இருக்கிறார்.
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்
பரிசு விழுந்தது பற்றி சாந்தனு கூறுகையில், "பரிசுத்தொகை விழுந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 49 கோடி ரூபாயை என்ன செய்வது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. எனது நண்பருடன் இணைந்து நான் லாட்டரியை வாங்கினேன். எனவே அவருடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன்" என்றார்.

ஐந்து ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வருகிறேன். எனக்கு பல மோசடி அழைப்புகள் வரும். அதேபோலத்தான் இந்த அழைப்பையும் நினைத்தேன். இன்று குலுக்கல் நடைபெறும் எனத் தெரியும். ஆனால் எனக்கு பரிசு விழும் என எதிர்பார்க்கவில்லை. பரிசு விழுந்த தகவல் கிடைத்ததும் எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை.
என் மகள் பிறந்த நேரம்
இன்னும் நான் இந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை." என்றார். 33 வயதான சாந்தனுக்கு கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தான் மகள் பிறந்துள்ளார். பெண் குழந்தை பிறந்த நிலையில், மகளே அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துள்ளதாக கூறும் சாந்தனு, குழந்தையின் பெயர் சூட்டுவிழாவின் போதே மகளை முதல் முறையாக பார்க்க வர உள்ளார்.
லாட்டரியால் பலர் பணத்தை இழந்து வந்தாலும் யாரோ ஒருவர் மொத்த ரூபாயையும் அள்ளி வருகிறார்கள். வருஷக் கணக்காக வாங்கிக் கொண்டிருக்கிறேன் ஆனால் பரிசு அடிக்கவில்லை என புலம்பியவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications