தேன்கனிக்கோட்டை காட்டில் கிடந்த உடல்.. பெங்களூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த கதி
பெங்களூர்: பெங்களூரில் ஒன்றாக ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தி தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர வைத்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல் அருகே வசித்து வந்தவர் கோபால் (வயது 41). இவர் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். நேற்று முன்தினம் கோபால் தனது காரில் ஆனேக்கல் அருகே கர்ப்பூர் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது காரை இன்னொரு கார் பின்தொடர்ந்து வந்தது. திடீரென்று கோபாலின் காரை பின்பக்கத்தில் இருந்து மோதியது. பிறகு காரை பின்தொடர்ந்து சென்றது. இதனால் பயந்துபோன கோபால் காரை நிறுத்தினார்.
காரில் கடத்தல்
இதையடுத்து கண்இமைக்கும் நொடியில் பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் கோபாலை அவரது காரில் இருந்து தங்களின் காரில் ஏற்றி கடத்தியது. இதுபற்றி அறிந்த குடும்பத்தினர் ஆனேக்கல் போலீசில் புகார் செய்தனர். கோபாலை மீட்டு தர வேண்டும். அவரை கடத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர், உறவினர்கள் ஆனேக்கல் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தேன்கனிக்கோட்டை வனப்பகுதி
இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கோபாலை மீட்பதாக கூறினர். ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே தான் கோபால் தமிழ்நாட்டின் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள வனப்பகுதியில் இறந்து கிடப்பது நேற்று போலீசாருக்கு தெரியவந்தது. கூரிய ஆயுதத்தால் அவர் கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. போலீசார் உடலை கைப்பற்றினர்.
3 பேர் கைது
இதையடுத்து கடத்தல் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. அதனடிப்படையில் மோகன் பாபு உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோகன் பாபு ரூ.25 லட்சத்தை வழங்கி கோபாலை தீர்த்து கட்ட கூலிப்படையை ஏவியதும். கூலிப்படையினர் கோபாலை கடத்தி கொன்றதும் தெரியவந்துள்ளது.
பிரிந்ததால் தீர்த்து கட்டிய நபர்
இதுபற்றி போலீசார் கூறுகையில், ''மோகன் பாபுவும், கொலையான கோபாலும் நண்பர்கள். இருவர்கள் 2 பேரும் சேர்ந்து தொழில் செய்து வந்தனர். அதன்பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிந்தனர். இதனால் கோபமடைந்த மோகன் பாபு, கோபாலை தீர்த்து கட்ட திட்டமிட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்துள்ளது. கைதான 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
மனைவி ஊருக்கு போன நேரத்தில்..வீட்டுக்கு வந்த கள்ளகாதலி! ப்ரிட்ஜில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சி -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications