வானத்தை நிமிர்ந்து பார்த்தால்.. சூரியனை சுற்றி கலராக ஒளி வட்டம்.. பூரித்துப்போன பெங்களூர் மக்கள்
பெங்களூர்: வானத்தை நிமிர்ந்து இன்று, சூரியனைப் பார்த்த பெங்களூர்வாசிகளுக்கு அதிசயம் காத்திருந்தது. மிகவும் அரிதாக நிகழக்கூடிய வானவில் நிறத்திலான ஒரு வட்டம் சூரியனை சுற்றி அழகுற காட்சியளித்ததுதான் இதற்கு காரணம்.
இந்த சூப்பர் காட்சியை புகைப்படமாக பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சூரியனை சுற்றி வானவில் தோன்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இந்த காட்சி. இதனை, சன் ஹாலோ என்று சொல்கிறார்கள்.

குளிர் பிரதேசங்கள்
குளிர் அதிகம் இருக்கக்கூடிய நாடுகளில் இது போல சூரியன் தென்படுவது வாடிக்கையான நிகழ்வுதான். நமது நாட்டில் அவ்வளவு எளிதாக இப்படியான காட்சி கிடைக்காது. சூரியனை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றுவதற்கு என்ன காரணம் என்கிறீர்களா.

22 டிகிரி வட்டம்
வளிமண்டலத்திலுள்ள பனி படிமங்கள் வழியாக சூரியன் அல்லது சந்திரனின் ஒளி ஊடுருவிச் செல்லும் போது இது போல வட்ட வடிவம் தோன்றுகிறது. 22 டிகிரி வட்டம் என்றும் இதனை அழைக்கிறார்கள்.

நிலவு ரிங்
சந்திரனை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றும் போது அது நிலவு ரேங்க் என்று அழைக்கப்படுகிறது, அல்லது வின்டர் ஹாலோ என்றும் கூறப்படுகிறது. பொதுவாக காற்றில் மிகுந்த ஈரப்பதம் இருக்கும்போது இதுபோல சூரியனை சுற்றி ஒளி வட்டம் தோன்றுவது வழக்கம். பெங்களூரிலும் இப்போது அது போல ஒரு ஒளிவட்டம் தோன்றியுள்ளது. வானிலை மாற்றத்தின் காரணமாக இது போல தோன்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புகைப்படங்கள்

சூரியனின் அழகு தோற்றம்
கை மற்றும் விரலை சூரியன் இருக்கும் இடத்திற்கு நேரே வைத்து புகைப்படம் எடுக்கும்போது, சன் ஹாலோ இன்னும் கூட பார்ப்பதற்கு மிகுந்த அழகாக காட்சியளிப்பதை கவனிக்க முடிகிறதல்லவா.
சூரியனின் மற்றொரு அழகான தோற்றம் இந்த புகைப்படத்தில் உள்ளது. மேலும், இவ்வாறு சூரியனை சுற்றி ஒளிவட்டம் தோன்றுவது தொடர்ந்தால், அது ஆட்சியாளர்களுக்கும், நாட்டுக்கும் நல்லது என்ற நம்பிக்கையும் உள்ளதாம்.

அடுக்குமாடி குடியிருப்பு
சூரியனை சுற்றிய ஒளிவட்டம் பெங்களூரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பின்னணியிலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? இதோ இப்படித்தான் பெர்ஃபெக்டாக இருக்கும். க்யூட்டாக இருக்கும். நீங்களும் அந்த அழகை பாருங்கள்.

வண்ணமயமான ஒளிவட்டம்
சூரியனை சுற்றிலும் வெறும் ஒளி வட்டம் மட்டுமல்லாது, அது வண்ணமயமாக காட்சியளிப்பதுதான் இந்த சூரிய ஹாலோவின் சிறப்பம்சம். இந்த புகைப்படத்தில் நீங்கள் அதை தெளிவாக பார்க்க முடியும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications