பெங்களூர் சிறையில் காய்கறி பயிரிட்ட சசிகலா.. சம்பளம் ஒரு பைசா கிடையாதாம்.. வெளியான தகவல்
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கிற்காக பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த சசிகலா, காய்கறிகளை விளைவித்ததற்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, சிறை வளாகத்தில் தோட்ட பணிகளை மேற்கொண்டார். அப்போது அவர் எவ்வளவு காய்கறிகளை விளைவித்து சிறையில் சமையல் செய்ய வழங்கினார்.

எவ்வளவு ஊதியம்
அதற்காக அவருக்கு எவ்வளவு ஊதியம் தரப்பட்டது என்பது குறித்து அறிய பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கர்நாடகா சிறைத் துறைக்கு மே 5ஆம் தேதி விண்ணப்பித்திருந்தார். இதற்கு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை தலைமை கண்காணிப்பாளர் ஆர் லதா ஜூன் 4ஆம் தேதி நரசிம்ம மூர்த்திக்கு பதில் அனுப்பியுள்ளார்.

தண்டனை கைதி
அதில் குறிப்பிட்டிருப்பதாவது: தண்டனை கைதி எண் 9234 கொண்ட விகே சசிகலா , மகளிர் சிறை பிரிவில் இருந்தார். அவருக்கு தோட்டத்தில் பணி வழங்கப்பட்டது. மற்ற மகளிர் கைதிகளுடன் இணைந்து சசிகலாவும் காய்கறிகளை விளைவித்தார். அவர் தனியாக எவ்வளவு விளைவித்தார் என கணக்கிடப்படவில்லை.

மகளிர் தண்டனை கைதிகளுடன்
மகளிர் தண்டனை கைதிகளுடன் ஒருங்கிணைந்து விளைவித்ததால் மொத்தமாக கணக்கிடப்பட்டது. எனவே சசிகலாவுக்கு ஊதியம் எதுவும் சிறைத் துறை சார்பில் வழங்கப்படவில்லை என பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே தான் ஓராண்டு சிறை தோட்டத்தில் பணியாற்றி சிறை சமையலுக்கு தேவையான காய்கறிகளை வழங்கி வந்ததை கருத்தில் கொண்டு சிறப்பு அனுமதியின் அடிப்படையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யும்படி 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 15 இல் சிறைத் துறை தலைமை கண்காணிப்பாளருக்கு சசிகலா விடுத்த கோரிக்கை கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. எனினும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஜெயலலிதா இருந்த போது சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட நாட்கள், பரோலில் வெளியே வந்த நாட்களை கணக்கு போட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை காலம் நெருங்கும் போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் இருந்த படியே விடுதலை செய்யப்பட்டார்.
-
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications