கர்நாடகாவில் பஞ்சாரா ஜாதியினருக்கு பட்டா வழங்கிய பிரதமர் மோடி.. காங்.வாக்கு வங்கிக்கு செம்ம வேட்டு?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கர்நாடகாவில் பஞ்சாரா ஜாதியினருக்கு பிரதமர் மோடி பட்டா வழங்கிய விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உள்ளூர் எம்.எல்.ஏ. வழங்க வேண்டிய பட்டாவை பிரதமர் மோடி வழங்குவது என்பதே ஜாதி வாக்குகளை குறிவைத்துதான் என சாடியிருக்கிறார் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி.
கர்நாடகா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்க பாஜக, ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ், கிங் மேக்கராவதற்கு ஜேடிஎஸ் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை விரைவுபடுத்திவிட்டன. ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தல் பணியை தொடங்கிவிட்டன.

இந்நிலையில் கர்நாடகாவில் கலபுரகி, யாத்கிரி, ரெய்ச்சூர், பிடார், விஜயபூரா ஆகிய ஐந்து மாவட்டங்களில் சுமார் 1,475 பதிவு செய்யப்படாத குடியிருப்புகள் புதிய வருவாய் கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கலபுரகி மாவட்டத்தின் சேடம் தாலுக்காவின் மால்கேட் கிராமத்தில் புதிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த தகுதியுடையப் பயனாளிகளுக்கு பிரதமர் மோடி நேற்று பட்டாக்களை வழங்கினார். ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டதன் மூலம் அவர்களுடைய நிலத்திற்கு அரசின் முறையான அங்கீகாரம் கிடைத்துள்ளது. குடிநீர், மின்சாரம், சாலை போன்ற அரசின் சேவைகளைப் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
இந்நிகழ்ச்சியின் போது, என்ஹெச்- 150 சி பிரிவின் 71 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கவும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த 6 வழி பசுமைச் சாலைத்திட்டம் சூரத்-சென்னை விரைவுச் சாலையின் ஒரு பகுதியாகும். இது 2,100 கோடி ரூபாய்க்கும் மேலான செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் சூரத்-சென்னை விரைவுச் சாலை இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் தற்போதைய வழித்தடம் 1,600 கிலோ மீட்டரிலிருந்து, 1,270 கிலோ மீட்டராக குறையும்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. இந்த மாதம் மிகவும் சிறப்பானது. ஜனவரி மாதத்தில்தான் இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. சுதந்திர இந்தியாவின் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. இந்த புனித ஜனவரி மாதத்தில், கர்நாடக மாநில அரசு சமூக நீதி தொடர்பான மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பஞ்சாரா இன மக்களைச் சேர்ந்த சுமார் 50,000 குடும்பங்களுக்கு முதல்முறையாக நிலப்பட்டா வழங்கப்படுகிறது. கலபுரகி, யாத்கிரி, ரெய்ச்சூர், பிடார், விஜயபுரா ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பஞ்சாரா இன மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பகுதிகளை வருவாய் கிராமங்களாக நிலை உயர்த்திய கர்நாடக மாநில அரசின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நமது நாட்டின் மேம்பாட்டிற்காக பஞ்சாரா இன மக்கள் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். 1994 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, நான் கலந்து கொண்ட பேரணியில் லட்சக்கணக்கான பஞ்சாரா இனமக்கள் கலந்துகொண்டனர். பஞ்சாரா இனத்தைச் சேர்ந்த தாய்மார்களும், சகோதரிகளும் பாரம்பரிய உடையில் வந்து ஆசீர்வாதம் வழங்கினர். பஞ்சாரா இனத்தைச் சேர்ந்த தாய்மார்களே கவலை கொள்ளாதீர்கள்! உங்கள் மகன்களில் ஒருவன் டெல்லியில் உங்களின் தேவைகளை நிறைவு செய்து வருகிறான். பஞ்சாரா சமுதாயத்தினருக்கான வேலைவாய்ப்பை கர்நாடக அரசு ஏற்படுத்தி வருகிறது. வன உற்பத்தி பொருட்கள், விறகு, தேன், பழங்கள் அல்லது மற்ற தயாரிப்புகள் தற்போது வருவாய் ஆதாரங்களாக விளங்குகிறது. முந்தைய அரசு வன உற்பத்தியின் சில பொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலையை அளித்தது. ஆனால், தற்போது 90-க்கும் மேற்பட்ட வன உற்பத்திப் பொருட்களுக்கு அது வழங்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக வளர்ச்சியின் பயன்களை பெரும்பாலான மக்கள் அடைய முடியவில்லை. அரசின் உதவி கிடைக்கவில்லை. தலித் சமுதாயத்தினர், ஒடுக்கப்பட்டோர், பின்தங்கியோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் முதன்முறையாக பலன் அடைந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் மிக விரைவாக அவர்களுக்கு கிடைக்கும். மக்களுக்கு அதிகாரம் அளிக்க தெளிவான திட்டத்துடன் எங்கள் அரசு செயல்பட்டு வருகிறது.
சமூகத்தில் மகளிர் நலனை கருத்தில் கொண்டு தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து துறையிலும் அவர்களுக்கான புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பழங்குடியின சமுதாயத்தினரின் பெருமையை நாடு அறிந்து கொள்ளும் வகையில் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புறக்கணிக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்கள் நாட்டின் பல்வேறு உயர்ந்த அரசியலமைப்பு பணிகளில் உள்ளனர். நீர்நிலைகளை உருவாக்குவதில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களின் பஞ்சாரா சமுதாயத்தினர் மற்றும் லகா பஞ்சாரா சமுதாயத்தினரின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. அதே பஞ்சாரா சமுதாயத்தினருக்கு சேவை புரிவது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பஞ்சாரா ஜாதியினருக்கு இந்த பட்டாக்களை வழங்க உள்ளூர் எம்.எல்.ஏ. போதுமே? பிரதமர் மோடி ஏன் வருகை தர வேண்டும்? எல்லாமே தேர்தலுக்கான நாடகம் என்கிறது ஜேடிஎஸ். இதனை பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளார் முன்னாள் முதல்வர் குமாரசாமி.
கர்நாடகாவில் ஒக்கலிகா, எஸ்சி-எஸ்டி வாக்குகள் காங்கிரஸுக்கு வாக்கு வங்கியாக இருக்கின்றன; லிங்காயத்துகள் பாஜகவின் ஆகப் பெரும் நம்பிக்கைக்குரிய வாக்கு வங்கியாக இருக்கிறது. கர்நாடகா மக்கள் தொகையில் எஸ்சி, எஸ்டியினர் மொத்தம் 24%. கர்நாடகா தலித்துகளில் பஞ்சாரா ஜாதி மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தலித்துகளுக்கான இடஒதுக்கீடு அளவை கர்நாடகா அரசு அதிகரித்திருக்கிறது. தற்போது பட்டாக்களை வழங்கி இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து தலித்துகளை இலக்கு வைப்பதால் எளிதாக வாக்குகளை அள்ள முடியும் என்பது பாஜகவின் கணக்கு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications