ஆவின் பால் பூத்களில் ரூ.25க்கு தயிர் பாக்கெட் விற்பனை

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை காலம் என்பதால் தயிர், ஐஸ்கிரீம், மோர் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. தனியார் பால் விற்பனை மையங்களில் இவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே சென்னை மாநகரில் உள்ள ஆவின் விற்பனை மையங்களிர் அரை லிட்டர் தயிர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன் விலை ரூ. 25 ஆகும்.

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை அலுவலகத்தில், பால் மற்றும் பால்பொருட்களை அறிமுகப்படுத்தியும், வெளி மாநிலங்களில் பால் பவுடர் விற்பனை மற்றும் புதிய தயிர் அரை கிலோ பாக்கெட்டுக்களை அறிமுகப்படுத்தியும் பேசினார்.

பால் விற்பனை

பால் விற்பனை

சென்னையில் தினசரி 11 லட்சத்து 70 ஆயிரம் லிட்டர் பால் விற்கப்படுகிறது. இதர நிறுவனங்கள் மற்றும் ரொக்க பால் விற்பனை மூலம் 60 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்யப்படுவதாக பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

4 லட்சம் லிட்டர் பால் விற்பனை

4 லட்சம் லிட்டர் பால் விற்பனை

கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி முதல் மொத்த விற்பனையாளர்களுக்கான உரிமம் வழங்கப்பட்டு, தினசரி விற்பனை 59 ஆயிரம் லிட்டரில் இருந்து 4 லட்சமாக உயர்ந்துள்ளது. இதை 6 லட்சமாக உயர்த்த விற்பனையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் பால் விற்பனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

பால் பவுடர்

பால் பவுடர்

தற்போது தமிழகத்தில் மட்டும் அரை மற்றும் ஒரு கிலோ பால் பவுடர் மாதத்துக்கு 3 ஆயிரத்து 500 கிலோ விற்கப்படுகிறது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள பால் பவுடர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பால் பவுடர் வெளி மாநிலங்களில் சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம் சில்லறை விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் அரை கிலோ, ஒரு கிலோ அளவில் பால் பவுடர் விற்பனை வெளி மாநிலங்களில் தொடங்கப் பட்டுள்ளது.

தயிர் பாக்கெட்

தயிர் பாக்கெட்

சென்னையில் 200 மிலி தயிர் பாக்கெட் மற்றும் கப்புகளில் சராசரியாக தினசரி ஆயிரம் முதல் ஆயிரத்து 500 லிட்டர் வரை விற்கப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்க, அரை லிட்டர் தயிர் ரூ.25 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது என்றும் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The sales of half-litre curd packets were introduced by Aavin at a price of Rs. 25.State Minister Mr. Rajendra Balaji inaugurated this special occasion by selling the first few curd packets.
Please Wait while comments are loading...