For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசின் மானிய குறைப்பு திட்டம்- சிலிண்டர்கள் விலை உயரும் அபாயம்

Google Oneindia Tamil News

Cylinder cost may be raises…
டெல்லி: மானிய செலவுகளை குறைக்க மத்திய அரசு திட்டம் தீட்டினால்சிலிண்டர் ஒன்றுக்கு 250 ரூபாய் வரை உயரும் அபாயம் ஏற்படும் எனத் தெரிகின்றது.

வரும் 26 ஆம் தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திர மோடி உடனடியாக மேற்க்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய நிதி, பெட்ரோலியம் , உரம் மற்றும் ரசாயன துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் செயல் திட்டங்களை தயாரித்து வருகின்றனர்.

இதில் பெட்ரோலியம் துறை தயாரிக்கும் திட்டத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தை குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரை இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு விலை சிலிண்டர் ஒன்றுக்கு 250 ரூபாய் உயர்த்த வேண்டும் எனவும் மானிய விலையில் வழங்கபடும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் செயல் திட்டத்தில் வலியுறுத்தபட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

English summary
If the new government inaugurated, the cost of cylinders must raises, says in the side of government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X