வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்காகவே குரல் கொடுத்த நிர்மலா சீதாராமன்.. கடன் வாங்குவோருக்கு குட்நியூஸ்
டெல்லி: வங்கிகள் மீண்டும் தங்களது அடிப்படை வங்கிச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். மேலும் ஆபத்தான கடன் வழங்கும் முறைகள் மற்றும் நிதி தயாரிப்புகளைத் தவறான முறையில் விற்பனை செய்வது போன்றவற்றுக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கிகள் தங்களின் லாபத்திற்காக வாடிக்கையாளர்களுக்குத் தேவையற்ற திட்டங்களைத் திணிப்பதைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மக்கள் இப்போது வங்கியில் பணம் போடுவதை விட, ஷேர் மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் வங்கிகளில் 'டெபாசிட்' குறைகிறது. மக்கள் கையில் இருக்கும் பணத்தை வங்கிக்குக் கொண்டு வராமல், வங்கிகள் எப்படி கடன் கொடுக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டு, திவால் நிலைக்கு செல்கின்றன. ஆனால் அரசு வங்கிகளை பணம் கொடுத்து காப்பாற்றி வருகின்றது.

நிர்மலா சீதாராமன் அதிருப்தி
அதேபோல் அண்மைக்காலமாக வங்கிக் கிளைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களிடம், அவர்களுக்குத் தேவையே இல்லாத காப்பீட்டுத் திட்டங்களையும் , முதலீட்டுத் திட்டங்களையும் வங்கி ஊழியர்கள் வற்புறுத்தி விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை 'மிஸ்-செல்லிங்' (Mis-selling) என்று குறிப்பிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த விவகாரத்தில் வங்கிகள் எல்லையை மீறுவதாக அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்.
அதிகப்படியான கடன் வழங்கும் முறை
டெல்லியில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், வங்கிகள் தங்களின் அடிப்படை வங்கிச் செயல்பாடுகளில் (Core banking) மீண்டும் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். வங்கிகள் மிதமிஞ்சிய அளவில் மற்ற துறைகளில் தடம் பதிப்பதையும், அளவுக்கு அதிகமான கடன் வழங்கும் முறைகளையும், வாடிக்கையாளர்களுக்குத் தவறான நிதி தயாரிப்புகளை விற்பனை செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.
முறையான ஆய்வுடன் கடன்
வங்கிகள் வைப்புத்தொகைகளைத் திரட்டுவதிலும், வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணுவதிலும், முறையான ஆய்வுடன் கடன் வழங்குவதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இதுவே வங்கியின் அடிப்படைத் தர்மம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வங்கிளுக்கு டெபாசிட்டே வருவது இல்லை
மேலும், "உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொண்டு, அவர்களைச் சென்றடைந்து, வைப்புத்தொகையைத் திரட்டி, உங்கள் உண்மையான பணியின் மூலம் வருவாயை ஈட்டுவதே சரியான வங்கிச் செயல்பாடாகும்" என்று அவர் சுட்டிக்காட்டினார். சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகள் தங்களின் பாரம்பரியப் பணிகளைத் தாண்டிச் செயல்பட்டதால், குறைந்த வட்டி கொண்ட சேமிப்புக் கணக்கு வைப்புத்தொகைகளின் வசதியை இழந்ததாகக் குறிப்பிட்ட அவர், சொத்து பாதுகாப்பு இல்லாத ஆக்ரோஷமான கடன் வழங்கல் முறைகள் வங்கிகளின் நிதி நிலையைப் பலவீனப்படுத்தியதாக விமர்சித்தார்.
வங்கிகள் அரசை மட்டுமே நம்பி இருக்க முடியாது
வங்கிகள் மூலதனத்திற்காக இனி அரசை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்றும், நிர்வாகத் தரத்தை உயர்த்தி சந்தையிலிருந்து நிதியைத் திரட்டிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, வீட்டுக் கடன் போன்ற சேவைகளைப் பெற வரும் வாடிக்கையாளர்களை வற்புறுத்தி, தேவையற்ற காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்யும் (Mis-selling) முறையைக் கடுமையாகக் கண்டித்த அவர், ஏற்கனவே போதிய காப்பீடு வைத்துள்ள ஒருவரிடம் மீண்டும் ஒரு காப்பீட்டைத் திணிப்பது முறையல்ல என்று கேள்வி எழுப்பினார்.
வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்காக குரல் கொடுத்த நிர்மலா சீதாராமன்
வீட்டுக் கடன் வாங்குபவர்கள் ஏற்கனவே சொத்தை அடமானமாக வைத்திருக்கும் நிலையில், அவர்களுக்குப் போதுமான காப்பீடுகள் இருந்தபோதிலும், கூடுதல் காப்பீட்டுத் தயாரிப்புகளை வாங்குமாறு கட்டாயப்படுத்தப்படும் நிகழ்வுகளை அவர் சுட்டிக்காட்டினார். "ஏற்கனவே ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு மற்றும் தீ விபத்துக் காப்பீடு வைத்திருப்பவர், ஏன் மற்றொரு காப்பீட்டை எடுக்க வேண்டும்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ரிசர்வ் வங்கி வரைமுறைக்கு வரவேற்பு
வங்கி மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு இடைவெளி காரணமாக இதுபோன்ற நடைமுறைகள் தொடர அனுமதிப்பதாக அவர் கருத்து தெரிவித்தார். தவறான விற்பனைக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதை அவர் வரவேற்றதுடன், இதுபோன்ற நடைமுறைகளைத் தொடர வங்கிகளால் இனி இயலாது என்றும் அழுத்தமாகக் கூறினார். டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இன்றைய பேச்சின் மொத்த சராம்சம் என்னவென்றால், "வங்கிகள் தங்களுடைய வேலையை விட்டுவிட்டு, வியாபாரத்தில் இறங்கியதுதான்" பிரச்சனை என்று கூறியுள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications