For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஜிட்டல் இந்தியா: இனி ரூ.2,000 வரை டெபிட் கார்டு பயன்படுத்தினால் சேவை வரி கிடையாது

டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை பரிவர்த்தனைக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: டிஜிட்டல் பண பாிவா்த்தனையில் டெபிட் காா்டுகளை பயன்படுத்தும்போது எம்.டி.ஆா். தொகை கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுவது வழக்கம். மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மக்களிடையே ஊக்கப்படுத்தும் விதமாக புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெபிட் காா்டுகளை பயன்படுத்தி ரூபாய் 2 ஆயிரம் வரை பணபாிவா்த்தனைகளில் ஈடுபடுபவா்களுக்கான கழிவுத் தொகையை அரசே செலுத்தும் என்று மத்திய அமைச்சா் தொிவித்துள்ளாா்.

No MDR charges on debit card payments up to Rs 2000 for 2 years

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசானது கருப்பு பொருளாதாரத்தை ஒழிக்கும் விதமாக அனைத்து விதமான ரொக்க நடவடிக்கைகளையும் முடிந்த வரையிலும் மின்னணு பரிவர்த்தனைகளாக மாற்றம் செய்ய முடிவெடுத்தது.

இதன் முதல் அதிரடி நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ஆகிய உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டது. கூடவே குறைந்த அளவிலான ரொக்க நடவடிக்கையையும் மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் மத்திய அரசு முன்வந்தது.

மேலும் அதிக அளவில் மின்னணு பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசுகளையும் அளித்து பாராட்டியது. இதன்மூலம் மேலும் அதிகப்படியான நபர்கள் மின்னணு பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முன்வருவார்கள் என்று நம்பியது.

மத்திய அரசு இவ்வாறு நினைத்தாலும் பெரும்பாலான பொதுத்தறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு அதிகப்படியாக பரிவர்த்தனை கட்டணங்களை (Transaction Charges) போட்டுத் தாக்கியது.

போதாக்குறையாக தற்போது பரிவர்த்தனை கட்டணங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியாக 18 சதவிகிதம் (சேவை வரியாம்?) ஜிஎஸ்டி கட்டணம் வேறு. இதனால் ஒவ்வொறு முறையும் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போதும், ஐயையோ, இதற்கு எவ்வளவு சேவைக் கட்டணம் தீட்டுவார்களோ என்று வாடிக்கையாளர்களின் மனம் கணினியைவிட மிக வேகமாக கணக்கு போடத்தொடங்கிவிடும்.

இதனால் வெறுத்துப்போன வாடிக்கையாளர்கள் எதற்கு வம்பு என்று பெரும்பாலும் ரொக்க பரிவர்த்தனையாகவே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கிகள் தங்களின் முடிவை மாற்றிக்கொண்டு ஏடிஎம் மற்றும் மின்னணு பரிவர்த்தனைக்கு வசூலிக்கும் பரிவர்த்தனை கட்டணங்களின் வரம்பை குறைக்கத் தொடங்கிவிட்டன.

தற்போது மத்திய அரசும் ஒருபடி மேலே போய், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலும் டெபிட் கார்டுகள் மூலம் ஒவ்வொரு முறையும் 2000 ரூபாய் வரையிலும் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அதனால் ஏற்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணத்தை (Merchant Trade Discount) மத்திய அரசே வங்கிகளுக்கு வழங்கிவிடும் என்று அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் வெள்ளியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்ட் பயன்படுத்தி இரண்டாயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தினால், வணிகர் கழிவுத்தொகையை மத்திய அரசே செலுத்தும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

இதனால், மத்திய அரசுக்கு சுமார் 2512 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றும், ஆயினும் மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவே இந்த கூடுதல் சுமையை ஏற்றுக்கொள்வதென்றும் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

புத்தாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு இது அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
The merchant Discount trade charges (MDR) upto Rs.2000 per transaction will be borne by the central government for next two years. This will be applicable from January 2018, Union Information Technology Minister Ravi Sankar Prasad said on Friday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X