லீக்கான வீடியோ! பாத்ரூமில் கேமரா! 60 பெண்களின் வீடியோவை கசியவிட்ட சக மாணவி! கடைசியில் மெகா அதிர்ச்சி
சண்டிகர்: சண்டிகர் பல்கலைக்கழத்தில் சக மாணவிகளின் குளியலறை காட்சிகளை பெண் ஒருவர் கசியவிட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,. மொத்தம் 60 பெண்களின் குளியலறை வீடியோக்களை அந்த பெண் கசியவிட்டுள்ளார்.
பிரபல சண்டிகர் பல்கலைக்கழத்தில் மாணவர்கள் இடையே சமீபத்தில் சில வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன. இந்த வீடியோக்கள், சண்டிகர் பல்கலைக்கழத்தில் உள்ள ஹாஸ்டலில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் ஆகும்.
ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 60 பெண்களின் வீடியோக்களை அந்த பெண் கசியவிட்டுள்ளார்.

எப்படி நடந்தது?
பாத்ரூமில் கேமரா வைத்து அந்த மாணவி வீடியோக்களை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே பாத்ரூமில் கேமரா வைத்து அதில் தினமும் குளிக்கும் பெண்களின் வீடியோக்களை அவர் எடுத்துள்ளார். இதை மொத்தமாக சேர்த்து அவர் இணையத்தில் லீக் செய்ததாக கூறப்படுகிறது. இந்த லீக்கான வீடியோக்கள் சண்டிகர் பல்கலைக்கழத்தில் மாணவர்கள், மாணவிகள் இடையே வாட்ஸ் ஆப்பில் வலம் வந்துள்ளது. இதுதான் அங்கு தற்போது பெரிய போராட்டத்திற்கு காரணம் ஆகி உள்ளது.

ஆண்கள்
முதலில் இந்த விவகாரத்தை அங்கு உள்ள ஆண் மாணவர்கள் யாராவது செய்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் விசாரணையில் அங்கே முதலாம் ஆண்டு எம்பிஏ படிக்கும் பெண் ஒருவர்தான் இதை செய்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவி தான் இப்படி வீடியோ எடுத்ததை ஹாஸ்டல் வார்டனிடம் ஒப்புக்கொண்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

ஏன் இப்படி
இந்த வீடியோக்களை எடுத்து இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் ஷிம்லாவை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் அந்த பெண் விற்று உள்ளார். அந்த பெண்ணை அந்த இளைஞர் மிரட்டியதால் இவர் வீடியோவை எடுத்து விற்றதாக ஒரு பக்கம் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் பணத்திற்காக அந்த பெண் வீடியோவை கசியவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பெண்ணிடம் இருந்து 60 பெண்கள் குளிக்கும் வீடியோக்களை வாங்கிய அந்த நபர், அதை இணையத்தில் கசியவிட்டுள்ளார்.. அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒப்புக்கொண்டார்
வீடியோவை பாத்ரூமில் வைத்து, அதை எடுத்து பரப்பியதாக அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார். இவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிகர் பல்கலைக்கழத்தில் இதனால் மாணவ, மாணவியர் போராட்டம் செய்து வருகின்றனர். இரண்டு மாணவிகள் இந்த சம்பவம் காரணமாக தற்கொலை முயற்சி செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதை போலீசார் தரப்பு மறுத்துள்ளது. அங்கு நடக்கும் போராட்டம் காரணமாக, பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications