இதுதான் தாலிபான் மனப்பான்மை.. ஹரியானா விவசாயிகள் மீதான போலீஸ் தடியடி பற்றி சஞ்சய் ராவத் காட்டம்
சண்டிகர்: ஹரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலை கண்டித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தாலிபான் மனநிலையில் அரசு செயல்படுவதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய ஹரியானா விவசாயிகள் நீண்ட காலம் போராடி வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை, விவசாயிகள் மீது போலீசார், சரமாரியாக தடியடி நடத்தினர்.

இதனால், 10 விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர். பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைவர்கள் சென்ற சாலையில் விவசாயிகள் மறியல் செய்து போராட்டம் நடத்தியபோது இதுபோல சரமாரியாக போலீசார் தடியடி நடத்தியிருந்தனர்.
இதுகுறித்து சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அவமானகரமானது. விவசாயிகளின் குரலை மத்திய அரசு காது கொடுத்து கூட கேட்கவில்லை. இதுபோன்ற தாக்குதல்கள், தாலிபான் மனப்பான்மை. இந்த அரசு எப்படி, ஏழைகளுக்கான அரசு அல்லது விவசாயிகளுக்கான அரசு என்று கூறிக்கொள்ள முடியும். விவசாயிகளின் மன் கி பாத் கேட்கப்படவில்லை. இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications