பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி: காவல்துறை கடும் ஆக்ஷன்.. 100க்கும் மேற்பட்டோர் மீது எப்.ஐ.ஆர்
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத 100க்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். இதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.
ஆனால் அப்பகுதியில் விவசாயிகள் போராட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டு இருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்பாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது. இதையடுத்து பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

பொறுப்பேற்ற விவசாய சங்கம்
இவ்விவகாரம் தொடர்பாக பாரதிய கிசான் யூனியன் (கிராந்திகாரி) சங்கத்தினர் பிரதமரின் வாகனப் பயணத்தைத் தடுத்து நிறுத்தியதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்துப் பேசிய பாரதிய கிசான் யூனியன் பொதுச் செயலர் பல்தேவ் சிங் ஜிரா, மோகா-ஃபெரோஸ்பூர் நெடுஞ்சாலையில் உள்ள பியாரியானா கிராமத்தில் பிரதமரின் வாகன பயணத்தை தடுத்த தர்ணாவுக்குத் தலைமை தாங்கியதாக கூறியுள்ளார்.

1000 தொண்டர்கள் பங்கேற்பு
வியாழக்கிழமையன்று அன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், தீவிர இடதுசாரி விவசாய சங்கத் தலைவர் சுர்ஜித் சிங் புல், தர்ணாவில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் இருந்ததாகவும், ஃபெரோஸ்பூரில் மோடி பேசவிருந்த பேரணியை அடைய பாஜக ஆதரவாளர்களின் பேருந்துகளை போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

100க்கும் மேற்பட்டோர் வழக்குப் பதிவு
ஃபெரோஸ்பூர்-மோகா தேசிய நெடுஞ்சாலையை மறித்து, பாதுகாப்பு மீறலுக்கு வழிவகுத்ததாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது பெரோஸ்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத 100க்கும் மேற்பட்டோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குல்கர்கி காவல்நிலைய காவல் அதிகாரி பீர்பால் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
Recommended Video

செய்யப்படவில்லை
ஆனால் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூடுதக் விவரங்களை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. முக்கியமான வழக்கின் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று தங்களிடம் மேல் அதிகாரிகள் கூறியுள்ளதாகவும், இவ்விவகாரம் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் கூறியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் கூறியுள்ளன. அதே நேரத்தில் மோடியின் கான்வாய் மேம்பாலத்தில் 15-20 நிமிடங்கள் மாட்டிக்கொண்டதற்கு வழிவகுத்த wஅபர்களை அடையாளம் காண ஊடங்கள் மற்றும் சமூக வலைதலங்களில் வெளியான வீடியோக்கள் பரிசீலிக்கப்படுகிறதா என்று கேட்டதற்கும் காவல்துறை அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications