சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது சும்மா ட்ரெய்லர் தான்! நாளைக்கு பாருங்க எங்க கூட்டத்தை! பஞ்சாப் அரசை கதிகலங்க வைத்த விவசாயிகள்.!

Google Oneindia Tamil News

சண்டிகர் : கோதுமைக்கான போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகள், மாநிலத் தலைநகராக செல்லும் வழியில் தடுக்கப்பட்டுள்ள நிலையில், சண்டிகர்-மொஹாலி எல்லை அருகே இன்று போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

கோதுமைக்கான போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஜூன் 10 முதல் நெல் விதைப்பு உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் காலவரையற்ற போராட்டத்திற்கு பஞ்சாபைச் சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

Farmers protesting against the ruling Aam Aadmi Party government in Punjab with various demands

இதனையடுத்து விவசாயிகளின் போராட்ட அறிவிப்பினை அடுத்து சண்டிகர்-மொஹாலி எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போராட்டம் நடத்திய விவசாயிகளை தடுக்க மொகாலி போலீசார் தடுப்புகள் மற்றும் தண்ணீரை பீய்ச்சியடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கட்டுப்படுத்த முயற்சித்தனர். சண்டிகர் போலீசாரும் இதேபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் பஞ்சாப் அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய நாளைக்குள் முதல்வர் பகவந்த் மான் அவசர கூட்டத்தை நடத்தவில்லை என்றால், தடுப்புகளை உடைத்து நாங்கள் சண்டிகரை நோக்கிச் செல்வோம் என்றார்.

எங்கள் போராட்டம் ஆரம்பம் மட்டுமே ஆகும், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இது தொடரும். இதுவரை 25 சதவீத விவசாயிகள் மட்டுமே இங்கு வந்துள்ளனர். நாளை மேலும் வருவார்கள். செய் அல்லது செத்து மடி என்பது வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவர் ஆவேசமாகக் கூறினார்.

30 ஆண்டு கோர போரின் கண்ணீர் சாட்சியம்! முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் இன்று! சில குறிப்புகள்! 30 ஆண்டு கோர போரின் கண்ணீர் சாட்சியம்! முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் இன்று! சில குறிப்புகள்!

விவசாயிகள் முன்வைத்திருக்கும் பல்வேறு கோரிக்கைகளில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் காரணமாக விளைச்சல் குறைந்து விட்டதால், ஒவ்வொரு குவிண்டால் கோதுமைக்கும் ₹ 500 போனஸ் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். மேலும் மின்சாரச் சுமையைக் குறைக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும் ஜூன் 18ஆம் தேதி முதல் நெல் விதைப்புக்கு அனுமதி அளிக்கும் பஞ்சாப் அரசின் முடிவுக்கும் அவர்கள் எதிராக உள்ளனர். ஜூன் 10 முதல் நெல் விதைக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் மக்காச்சோளம் மற்றும் மூங்கில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மின்சார சுமையை ₹ 4,800 லிருந்து ₹ 1,200 ஆக நீட்டித்தல், 10-12 மணி நேரம் மின்சாரம் வழங்குதல் மற்றும் கரும்பு நிலுவைத் தொகையை வழங்குதல் போன்றவற்றின் கட்டணத்தை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்துவதற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகள் உணவுப் பொருட்கள், படுக்கைகள், மின்விசிறிகள், குளிரூட்டிகள், பாத்திரங்கள், சமையல் காஸ் சிலிண்டர்கள் மற்றும் பிற பொருட்களை எடுத்துக்கொண்டு பஞ்சாப் முழுவதிலும் இருந்து குருத்வாரா அம்ப் சாஹிப்பில் கூடியிருந்தனர். இந்நிலையில் பஞ்சாப் அரசிடம் இருந்து ஒரு சந்திப்புக்கான செய்தி கிடைத்துள்ளதாக விவசாய சங்கங்கள் கூறியுள்ளன. இது தொடர்பாக பேசிய நிர்வாகி ஒருவர், "புதன்கிழமை காலை 11 மணிக்கு முதல்வருடனான சந்திப்பு நிச்சயிக்கப்பட்டுள்ளதாக டிஜிபியிடம் இருந்து எங்களுக்குச் செய்தி வந்துள்ளது. மேலும் மற்றொரு செய்தியு, வந்தது, முதல்வர் டெல்லி சென்றுள்ளதால் தலைமைச் செயலாளருடன் சந்திப்பு நடத்தப்படலாம் என்றும் கூறினார்.

அரசு அதிகாரியை சந்திப்பதன் மூலம் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நம்பிக்கை இல்லை என்ற விவசாயிகள், முதலமைச்சர் மான் எங்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி, எங்கள் பிரச்சினைகளை நாளைக்குள் தீர்க்காவிட்டால், நாங்கள் மேலும் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், சண்டிகரில் நுழைவதற்கான தடுப்புகளை உடைத்து முன்னேறுவோம் இது எங்கள் எச்சரிக்கை என்று விவசாய சங்க நிர்வாகியான டல்வால் கூறியுள்ளார்.

குருத்வாரா அம்ப் சாஹிப்பில் இருந்து தங்கள் அணிவகுப்பைத் தொடங்கி, சண்டிகர்-மொஹாலி எல்லைக்கு அருகில் மொஹாலி காவல்துறையால் போடப்பட்ட மற்ற தடைகளை தாண்டி சென்றபோது எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் முதல் அடுக்கு தடுப்புகளை உடைத்தனர். ஆனால், இரண்டாவது அடுக்கு தடுப்புகளை உடைக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அமைதியான முறையில் போராட்டத்தை தொடங்குமாறும் எதிர்ப்பாளர்களை விவசாய சங்க தலைவர் டல்வால் வலியுறுத்தினார்.

தடுப்புகளை உடைத்து முன்னோக்கி நகர்வது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால் நாங்கள் இங்கு அமைதியான முறையில் அமர்ந்திருப்போம். இந்த போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி முதலமைச்சருடன் தாங்கள் நடத்திய சந்திப்பின் போது 11 கோரிக்கைகள் அடங்கிய சாசனத்தை சமர்ப்பித்ததாகவும், அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக மன் உறுதியளித்ததார். ஆனால் ஒரு கோரிக்கை கூட இன்னும் ஏற்கப்படவில்லை என்று மற்றொரு விவசாய சங்க தலைவரான லகோவால் சிங் கூறினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

English summary
Farmers protesting against the ruling Aam Aadmi Party government in Punjab with various demands including bonuses for wheat are continuing their struggle today near the Chandigarh-Mohali border as they are blocked on their way to the state capital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X