விளையாட்டுக்கு அளவே இல்லாம போச்சு! ஓடும் காரில் பட்டாசு வெடித்து இளைஞர்கள் அட்டகாசம்..பரவும் வீடியோ!
சண்டிகார்: அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் இளைஞர்கள் சிலர் காரின் பின்பக்கம் பூட் ஸ்பேஸ் பகுதியில் பட்டாசுகளை வைத்து வெடிக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையின் போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து கொண்டாடுகின்றனர்.
இப்படி கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க பலரின் கவனங்களை பெறுவதற்காக ஒருசிலர் பட்டாசுகளை விதவிதமாக வெடிக்கின்றனர்.
விபத்து நடப்பதற்கு சில நிமிடம் முன்பு.. சைரஸ் மிஸ்திரி சென்ற காரின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

விளம்பரம் தேடிக்கொள்ளும் ஆர்வத்தில்
தலையில் வைத்து வெடிப்பது, கைகளில் பட்டாசுகளை வைத்து கொண்டு வெடிக்கும் நேரத்தில் தூக்கி வீசுவது என விபரீத விளையாட்டுக்களிலும் இளைஞர்கள் சில இடங்களில் காண முடிகிறது. தீக்காயங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதை அறிந்தும் இப்போதுள்ள சில இளசுகள் சிலர் இத்தகைய ஆபத்தான காரியங்களில் ஈடுபடுகின்றனர். தங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் ஆர்வத்தில் தான் பெரும்பாலும் இப்படி விபரீதங்களில் ஈடுபடுவதாக தெரிகிறது.

அச்சத்தில் வாகன ஓட்டிகள்
டி.எல்.எப் பேஸ் -III நோக்கி செல்லும் சாலையில் இந்த விபரீத செயலில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனை சக வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் கருப்பு நிற செடான் ரக கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அப்போது காரின் பின்பக்கத்தில் உள்ள பூட் ஸ்பேஸ் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த வெடிகள் ஒவ்வொன்றாக வானை நோக்கி சீறிப்பாய்ந்து வெடிக்கின்றன.

இணையத்தில் பரவும் வீடியோ

3 இளைஞர்கள் கைது
இந்த வீடியோவை குருகிராம் போலீசாருக்கு பலரும் டேக் செய்து புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் புகாரை பதிவு செய்த போலீசார், விபரீத செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் 3 பேரையும் கைது செய்தனர். காற்று மாசுவை கருத்தில் கொண்டு குருகிராம் பகுதியில் பசுமை பட்டாசுகளை தவிர வேறு விதமான பட்டாசுகள் அனைத்திற்கும் குருகிராம் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளர். இந்த தடையை மீறி பட்டாசுகளை வெடித்தது உள்ளிட்ட பிரிவுகளின் மீது கைதான நகுல், ஜடின் மற்றும் கிருஷ்ணா ஆகிய மூன்று பேரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காற்று மாசு
டெல்லியில் காற்று மாசு அதிக அளவில் இருப்பதால் பட்டாசுகள் வெடிக்க அங்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றியே என்சிஆர் பகுதிகளிலும் பசுமை பட்டாசுகளை தவிர ஏனைய அனைத்து விதமான பட்டாசுகளுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் - ஜனவரி வரை காற்று மாசு மிகவும் அபாய கட்டத்தை என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.