Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்துவுக்கே சித்து வேலை காட்டிய சன்னி.. முதல்வர் ரேசில் முன்னிலை - பரபர பஞ்சாப் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்திற்குப் பிறகு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கு ஆதரவு பெருகி உள்ள நிலையில் முதல்வர் வேட்பாளராக நவ்ஜோத் சிங் சித்து, முதல்வர் சரண்ஜித் சிங் ஆகிய இருவரில் யாரை மக்கள் முன் நிறுத்துவது என காங்கிரஸ் கட்சி குழப்பமடைந்து உள்ளதாகவும், சுழற்சி முறையில் முதல்வர் பதவியை கொடுக்கலாமா எனவும் காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்வது என காங்கிரஸ் தலைமை குழப்பமடைந்தது. பல்வேறு பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அமரிந்தர் சிங் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக பாஜகவிலிருந்து விலகி பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தாவிய நவ்ஜோத் சிங் சித்து கடந்த ஆண்டு பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அமரிந்தர் சிங் தரப்பு சித்து தரப்பு என இரு பிரிவாக காங்கிரஸ் கட்சியினர் பிரிந்து செயல்பட்டதால் அக்கட்சி பலவீனமடைந்தது தொடர்ந்து அமர்சிங் பதவி விலகியது அடுத்தடுத்து ட்விஸ்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு ட்விஸ்ட்டை சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

நவ்ஜோத் சிங் சித்து

நவ்ஜோத் சிங் சித்து

விரைவில் பஞ்சாப் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்சிங் சனி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தங்களை முதல்வர் வேட்பாளர்களாக கருதி வருவதால் இதில் யாரை தேர்வு செய்வது என காங்கிரஸ் கட்சியும் குழப்பம் அடைந்து உள்ளது. பஞ்சாப் சட்ட மன்ற தேர்தலில் வேட்பாளர்களை நவ்ஜோத் சிங் சித்து மட்டும் முடிவு செய்ய மாட்டார் என காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளிவந்துள்ள தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் சரண்ஜித்சிங் தரப்பினருக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி

முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி

கடந்த வாரம் வரை காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து இருந்ததால் காங்கிரஸ் தலைமைக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தை முதல்வர் சன்னி கையாண்ட விதம் காங்கிரஸ் தலைமையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

காங்கிரஸின் இரு துருவங்கள்

காங்கிரஸின் இரு துருவங்கள்

செப்டம்பர் மாதத்தில் கேப்டன் அமரிந்தர் சிங் தலைமை பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுப்பது ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் யோசனை என கட்சி வட்டாரங்கள் கூறிய நிலையில், நவ்ஜோத் சிங் சித்து பதவிக்கு ஆசைப்படாமல் காங்கிரஸ் கட்சியை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தும், முதல்வர் சன்னியும் இணைய வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்தது. பஞ்சாப் காங்கிரஸின் தலைவரும் முதலமைச்சர்ம் ஒன்றாக பிரச்சாரம் செய்யாமலும், இருவருமே தங்களை காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கருதுவது காங்கிரஸ் தலைமைக்கு தலை வலியை ஏற்படுத்தியது.

ஸ்கோர் செய்த சன்னி

ஸ்கோர் செய்த சன்னி

இந்த நிலையில் கடந்த வாரம் முதல் முதல்வர் சன்னிக்கு சாதகமாக காற்று வீச தொடங்கியது. மோகா - பெரோஸ்பூர் நெடுஞ்சாலையில் பிரதமரின் சிக்கிக் கொண்ட போது பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் பஞ்சாப் அரசாங்கம் சமரசம் செய்ததாக கூறி அவர் மீது அஸ்திரங்களை வீசினர் பாஜகவினர். ஆனால் அந்த பால்களை கோல்களாக மாற்றினார் சன்னி. மோசமான வாக்கு அரசியலுக்காக பாஜகவினர் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டை முன் வைத்ததாக கூறி சன்னி வெகுண்டெழுந்ததோடு, வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து எதிர்த்துத் தாக்கும் நடவடிக்கைக்கு தாவியது காங்கிரஸ் கட்சியை சற்று யோசிக்க வைத்துள்ளது.

பெருகிய ஆதரவு

பெருகிய ஆதரவு

முதல்வர் சன்னி பாஜகவை தாக்கியதோடு வெகுஜனங்கள் உடன் இணைந்து சென்றது, பஞ்சாபியாட் என்ற அடையாளத்தை முன்னிறுத்தியதோடு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது முதல் போராட்டக்காரர்களை நேரில் சந்திப்பது வரை அரசியல் களத்தில் இறங்கி விளையாடும் கலையைக் கற்றுக்கொண்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக முதல்வர் சன்னியின் மதிப்பு பொதுமக்கள் மத்தியில் உயர்ந்துள்ள நிலையில் தனது தரப்பை நிரூபிக்க சிந்து மறந்து விட்டதாக கூறப்படுகிறது.

சுழற்சி முறை முதல்வர்

சுழற்சி முறை முதல்வர்

இந்த நேரத்தில்தான் 2022 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவை பஞ்சாப் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மட்டும் முடிவு செய்ய மாட்டார் எனவும் முதல்வருக்கும் இதில் முக்கிய பங்கு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் சித்து, சன்னி ஆகிய இருவரையும் அவர்களது ஆதரவாளர்களையும் பகைத்துக் கொள்ளவும் காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது இரு தரப்பினருக்கும் சமவாய்ப்பு அளிப்பதோடு சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பற்றி விவாதிக்கலாம் என்றும், தற்போதைக்கு இருவருக்கும் இடையே மோதல் மட்டும்தான் கட்சியினருக்கு ஆபத்து என்று கருதுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+