அடேங்கப்பா... டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2ஏ பதவிகளுக்கு 11.61 லட்சம் பேர் விண்ணப்பம்
இதுவரை இல்லாத அளவிற்கு குரூப்2, குரூப் 2ஏ பதவிகளுக்கு 11.61 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,529 பணியிடங்களுக்கு மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் 11,786 பேரின் விண்ணப்பங்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள்தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இந்த ஆண்டு குரூப் 2 பதவிக்கு 116 பணியிடம். நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2ஏ பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 காலி பணி இடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கியது.
இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என அனைவரும் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். மார்ச் 23ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடைசி நாளில் ஏராளமானோர் விண்ணப்பிக்க முயற்சித்ததால், பலருக்கும் ஒன் டைன்ம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய முடியாமல் போனதாக புகார் எழுந்தது. விண்ணப்பிக்க நாள் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் மார்ச் 23ஆம் தேதியுடன் ஆன்லைன் விண்ணப்பம் நிறைவடைந்தது
இருப்பினும் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை புதிய சாதனையை படைத்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,529 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 1 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டதாகவும், நேற்று முன்தினம் (மார்ச் 23) இரவு 12 மணி வரை மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 11,786 பேரின் விண்ணப்பங்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications