மெரீனாவில் குளிக்கப்போய் அலையில் சிக்கிய சிறுவர்கள்... உயிரிழந்த சோகம்
மெரினா கடலில் குளித்து கொண்டிருந்த இரு பள்ளி மாணவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.சென்னை: மெரீனா கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் கடலுக்குள் இறங்கி குளித்த போது அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உய
சென்னை: மெரீனா கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் கடலுக்குள் இறங்கி குளித்த போது அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மிக நீளமான அழகிய கடற்கரை மெரீனா. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் மெரீனா கடற்கரைக்கு காற்று வாங்கவும் மணல் பரப்பில் விளையாடவும் வருகின்றனர். பலர் ஆர்வத்தில் கடலில் குளித்து விளையாடுவார்கள். ஆபத்தை பற்றி எடுத்துக்கூறி எச்சரித்த பின்னரே பலரும் கடலை விட்டு கரைக்கு திரும்புவார்கள்.
சிறுவர்கள் பலர் அலையின் ஆபத்தை உணராமல் கடலுக்குள் இறங்கி விளையாடி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. இன்றைய தினம், இரண்டு சிறுவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
திருநின்றவூரை சேர்ந்த மாணவர்கள் ஹாரிஷ்,13 மற்றும் ஆகாஷ்,15 இருவரும் தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இன்றைய தினம் பள்ளிக்குச் செல்லவதாக வீட்டில் கூறிவிட்டு மெரினா கடற்கரைக்கு தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் வந்தனர்.
நேதாஜி சிலை பின்புறத்தில் உள்ள கடற்கரை மணலில் விளையாடிய 9 மாணவர்களும் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஹரீஸ், ஆகாஷை அலை இழுத்துக்கொண்டு சென்றது. தங்களுடன் குளித்த சக நண்பர்கள் கடல் அலையில் சிக்கி காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் மெரினா கடற்கரை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து மீட்பு படையினர், அடித்து செல்லப்பட்ட இரு மாணவர்களை கடலில் தீவிரமாக தேடினர். சில மணி நேரத்திற்கு பிறகு உயிரிழந்த நிலையில் இரு மாணவர்களின் உடலும் கரை ஒதுங்கியது. மாணவர்களின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்! 3 பேர் கைது -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications