Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2023 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்.. யாருக்கு குரு பலன் கூடி வரும்? சனியால் யாருக்கு சங்கடம் தீரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023ஆம் ஆண்டு பிறந்துள்ளது. கொடிய நோய்களும் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறது. மக்களிடையே அச்சம் இருந்தாலும் நன்றாக வசதியாக குடும்பம், குழந்தை என்று வாழ வேண்டுமே என்ற ஆசை அனைவருக்கும் ஏற்படுகிறது. கொரோனா பெருந்தொற்று அச்சத்திற்கு இடையேயும் எந்த ராசிக்காரர்களுக்கு தடைகளைத் தாண்டி திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று பார்க்கலாம். குருபலன் எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சனியால் யாருடைய சங்கடம் நீங்கப்போகிறது என்று பார்க்கலாம்.

காசு பணம் கைநிறைய சம்பாதித்தாலும் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். சிலருடைய வாழ்க்கை போர்க்களமாக இருக்கும். இந்த ஆண்டு அமைதியும் சந்தோஷமும் ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பிள்ளைகளால் நிம்மதியிழந்து தவிர்ப்பவர்களுக்கும், புத்திரபாக்கியத்திற்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு குருவின் ஆசியால் இந்த 2022ஆம் ஆண்டு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

2023 New year rasi palan Tamil Who will get Marriage and child birth on Puthandu

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. உங்களின் பொருளாதார நிலைமை இந்த 2023ஆம் ஆண்டில் சிறப்பாக இருக்கும். கூடவே சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். காதல் திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். குழந்தைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குரு பகவான் சஞ்சாரம் பார்வையால் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. குருபகவானை வழிபட தடைகள் நீங்கி திருமணம் கை கூடி வரும்.

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, புத்தாண்டு உங்களுக்கு சாதகமான ஆண்டாக அமைந்துள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகமாகி காதலாகி கசிந்து உருகி நேசிப்பார்கள். திடீர் திருமண யோகம் கை கூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். ராசிநான் சுக்கிரனின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது பாசத்திற்கு உரிய ஆண்டாக 2023ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே..வலிகள் நிறைந்த ஆண்டை எளிதாக கடந்து விட்டீர்கள். உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு நிறைய அதிர்ஷ்டங்களைத் தரப்போகிறது. குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையேயான சண்டைகள் முடிவுக்கு வரும். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்பட்டாலும் உறவினர்கள் உதவியால் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கும், ஏழாம் வீட்டிற்கும் கிடைப்பதால் திருமண யோகமும் புத்திர யோகமும் கை கூடி வரப்போகிறது.

கடகம்

சந்திரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, உங்களுக்கு 2023ஆம் ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. வருட துவக்கத்தில் குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண யோகம் கை கூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். அஷ்டமத்து சனியால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். தடைகளைத் தாண்டி முன்னேற்றம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வரலாம் கவனம் தேவை.

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே,உங்கள் ராசிக்கு இந்த புத்தாண்டு அதிசயங்களை தரப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொருளாதார வளமும் அபரிமிதமாக இருக்கும். குருவின் பார்வையால் குடும்ப உறவுகள் குதூகலத்தை தரும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். பொருளாதார நெருக்கடிகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். திருமண பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைச்செல்வத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரம் கிடைக்கும். குருவின் பார்வை குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும் என்பதால் 2023ஆம் ஆண்டு வளர்ச்சிகள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

கன்னி

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த ஆண்டு நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்திகள் தேடி வரும். மன மகிழ்ச்சியும் நிம்மதியும் தேடி வரும். பிள்ளைகளால் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் முடிவுக்கு வரும். காதல் கை கூடும். புதுமணத்தம்பதியரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும் விதமாக புத்தாண்டில் பிள்ளைச் செல்வத்தை வரவேற்க தயாராகுங்கள். நோய்களால் துன்பப்பட்ட உங்களுக்கு இனி ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். நிதிச்சிக்கல்கள் நீங்கும் கடன் பிரச்சினை விலகும். மன அழுத்தம் முடிவுக்கு வரும்.அதே நேரத்தில் அவசர முடிவுகளை எடுத்து ஆபத்தில் மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை.

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு இது அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் ஆசியோடு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். மன நிம்மதி அதிகரிக்கும். மே மாதத்திற்குப் பிறகு கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த ஊடல்கள் நீங்கும். காதலிப்பவர்களுக்கு இந்த ஆண்டு குடும்பத்தினர் அனுமதியோடு திருமணம் கை கூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். குரு பகவானின் புண்ணியத்தால் 2023ஆம் ஆண்டு பொற்காலமான ஆண்டாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்களுக்கு 2022ஆம் ஆண்டு யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். கருத்து வேறுபாடுகளால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையேயான அன்பும் அன்னியோன்னியமும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழத் தொடங்குவீர்கள். ஏப்ரல் மாதம் வரைக்கும் குரு பகவானின் அருளாலும் குருவின் பார்வையாலும் குழந்தை பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகளால் நல்லதொரு செய்தி தேடி வரும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கி இந்த ஆண்டு முதல் மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த நல்லதொரு ஆண்டாக அமைந்துள்ளது.

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த ஆண்டு சுபத்துவம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. ஏழரை சனி முடியப்போவதால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சனிபகவானால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கப்போகிறது. உங்களுடைய திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. தடைகள் ஏற்பட்டு வந்த திருமண சுபகாரியங்கள் இந்த ஆண்டு வெற்றிகரமாக நிறைவேறும். கடந்த சில ஆண்டுகாலமாகவே கணவன் மனைவிக்குள் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள். குரு பகவானின் பார்வையால் குடும்பத்திற்குள் புதிய வரவாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். மழலைச் செல்வம் மடியில் தவழ தனுசு ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். புது வீட்டிற்கு இடமாற்றம் உண்டாகும். வித்தியாசமான முடிவுகளை எடுப்பீர்கள். மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. சுப காரிய தடைகள் விலகும். மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சுக்கிரன் அருளால் இல்லற வாழ்க்கை இனிமையானதாக அமையும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். குல தெய்வ வழிபாடு நன்மையைத் தரும். ஜென்ம சனி விலகுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து இணக்கமாக செல்வீர்கள். உங்களின் பொருளாதாரம் இந்த ஆண்டு நன்றாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள்.

கும்பம்

2023 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்திற்காக இந்த ஆண்டு நிறைய நேரம் செலவு செய்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. தன லாபம் அதிகரிக்கும் வருமானம் கூடும் சேமிக்க முடியாத அளவிற்கு சுப செலவுகள் வரும். கஷ்டங்கள் இல்லாத ஆண்டாக அமையும். மனதளவில் ஏற்பட்டிருந்த சங்கடங்கள் நீங்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். குழந்தைகள் விசயத்தில் கூடுதல் பொறுப்புணர்வோடு நடந்து கொள்வீர்கள். 2023ஆம் ஆண்டு சாதனைகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வணங்கி வர சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகிறார். இரண்டாம் வீட்டில் ராகு குரு என கூட்டணி சேர்ந்து அமர்வது வெற்றியைத் தரும் ஏழரை சனியில் விரைய சனி என்றாலும் வேலை செய்யும் இடத்தில் உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். திருமணமான தம்பதியருக்கு இடையே அன்பும் நேசமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் நல்ல செய்தி தேடி வரும். குழந்தை பாக்கியம் கை கூடி வரும். 2023ஆம் ஆண்டு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மீன ராசிக்காரர்கள் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+