புத்தாண்டுக்கு டஃப் கொடுத்த சண்டே லாக்டவுன்.. டாஸ்மாக்குக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்த குடிகாரர்கள்
சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு விற்பனையை விட நேற்று தமிழகத்தில் சுமார் 218 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது.
கொரோனா பரவலை முன்னிட்டு தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர பிற நிறுவனங்கள் கடைகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன இதேபோல ஓட்டல்களில் இயங்கும் எஃப் 2 வகை உரிமம் பெற்ற பார்களும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.

புத்தாண்டில் சரிந்த டாஸ்மாக்
வழக்கமாக புத்தாண்டு தினத்தில் மது விற்பனை களைகட்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வழக்கத்தை விட அதிக அளவில் மது விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு நிறைவடைந்து 2022ஆம் ஆண்டு பிறந்த நிலையில் மது விற்பனை வரலாற்றுச் சாதனை படைக்கும் என கருதப்பட்ட நிலையில் 147.69 கோடி ரூபாய்க்கு மட்டுமே மது விற்பனை நடைபெற்றது.

டாஸ்மாக் அதிர்ச்சி
இது கடந்த ஆண்டு விற்பனையான அளவை விட குறைவாகவே இருந்தது. கடந்த ஆண்டு மட்டும் 153 கோடி ரூபாய் மது விற்பனை நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு விற்பனை குறைந்ததால் டாஸ்மாக் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் புத்தாண்டு விற்பனை சரிவை ஈடுகட்டும் வகையில் முழு ஊரடங்கு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 217.97 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.

217 கோடிக்கு மதுவிற்பனை
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அளித்துள்ள தகவலின்படி தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் இந்த விற்பனை நடைபெற்று உள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் மதுபானங்களுக்காக தெருதெருவாய் அலைய வேண்டிய அல்ப நிலைக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக வீட்டுக்குத் தேவையான பொருட்களுக்கு தரும் முக்கியத்துவத்தை தந்துள்ளனர் குடிகாரர்கள். மாலை 6 மணி முதல் இரவு 10 மணிக்குள்ளாகவே இந்த விற்பனை சாதனையை எட்ட வைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் வயிற்றில் பாலை வார்த்துள்ளனர் தமிழக குடிமகன்கள்.
Recommended Video

சென்னை முதலிடம்
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள தகவலின் படி நேற்று மட்டும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் 217.97 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 50 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அடுத்ததாக மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாய் அளவுக்கும், திருச்சி மண்டலத்தில் 42.59 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது. இதற்கு அடுத்த படியாக சேலம் மண்டலத்தில் 40.85 கோடிக்கும், கோவை மண்டலத்தில் 41.28 கோடி ரூபாய்க்கும் மதுபானங்களை அள்ளிக் குவித்துள்ளனர் தமிழக குடிமகன்கள்.
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications