Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chennai Nandhanam: சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் பெண் பாலியல் வன்கொடுமை! கேன்டீன் ஊழியர் உள்பட 3 பேர் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கல்லூரியில் உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் உள்பட 3 பேரை சைதாப்பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை நந்தனத்தில் உள்ளது அரசுக் கலைக் கல்லூரி. இங்கு ஆண், பெண் இரு பாலரும் படித்து வருகிறார்கள். இந்தக் கலைக் கல்லூரியில் உள்ள கேன்டீனில் புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார்.

Chennai Nandhanam

இவர், அதே கேன்டீனில் பணியாற்றி வந்த அரியலூரை சேர்ந்த 22 வயது பெண்ணை கல்லூரி வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இவரைத் தொடர்ந்து அந்த கேன்டீனில் பணியாற்றும் மற்றொரு ஊழியர் கார்த்திகேயன், கேன்டீர் நடத்தும் முத்துச்செல்வம் ஆகியோரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் கல்லூரி காவலாளியிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து குணசேகரன், கார்த்திகேயன், முத்துச்செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் பெண்ணுக்கு நடந்த கொடுமையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினரும் அக்கல்லூரியை சேர்ந்த மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

சென்னை தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கியிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி மற்றும் அவரது 2 வயது குழந்தை கொல்லப்பட்டு, மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் அடங்காத நிலையில், சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மற்றொரு பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை கண்டனம்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தில் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வி நிலையங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, மிகவும் அச்சத்தை அளிக்கிறது. முதலமைச்சர் @mkstalin மேடையேறி, தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்று எத்தனை பொய்கள் சொன்னாலும், உண்மை நிலை முற்றிலும் மாறாக இருக்கிறது என்பதை, தினமும் நாம் காணும் இது போன்ற செய்திகள் நிரூபிக்கின்றன.

முதலில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற கடினமான உண்மையை திமுக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அதற்கேற்ற நடவடிக்கைகளை திட்டமிட முடியும். அதை விடுத்து, ஒரு மாய உலகத்தில் அமர்ந்து கொண்டு, யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்பித்துச் செல்வதல்ல முதலமைச்சரின் பணி.

கட்டுக்கடங்காத போதைப் பொருள்கள் புழக்கம், சமூகத்தில் மிகப் பெரிய அவலத்தை ஏற்படுத்தியிருப்பது, பெருகி வரும் பாலியல் குற்றங்களால் வெளிப்படையாகியிருக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என, திமுக அரசின் கையாலாகாத்தனம், அமைதியான நம் தமிழகத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது.

குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால்தான், மேலும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான், குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திமுக அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்தபடி போட்டோ எடுத்துக் கொள்ளும் இழிநிலை இருக்கிறது. அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்ற, எந்த எல்லைக்கும் செல்கிறது திமுக அரசு. பிறகு எப்படி குற்றம் செய்பவர்களுக்குப் பயம் வரும்? சாதாரண பொதுமக்களுக்குத்தான் பயம் வருகிறது.

திமுக ஆட்சியின் இருண்ட காலம், இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான், தமிழக மக்களுக்கு தற்போது நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம். இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அது போல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+